நான் இந்த படத்துல நடிச்சிருக்கேன்னு விளம்பரம் செய்யக்கூடாது.. தயாரிப்பாளரிடம் நிபந்தனை விதித்த ரஜினி..!

By Bala Siva

Published:

பொதுவாக ஒரு திரைப்படத்தில் பிரபல நடிகர் ஒரு காட்சியில் நடித்தால் கூட அந்த படத்தில் அவர் நடித்தது போன்ற ஒரு விளம்பரத்தை வைத்து தான் அந்த படத்தை ஓட்டுவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்துவிட்டு நான் இந்த படத்தில் நடித்துள்ளேன் என்று எந்த காரணத்தை முன்னிட்டும் விளம்பரம் செய்யக்கூடாது என்று தயாரிப்பாளரிடம் நிபந்தனை விதித்தார். அந்த தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு, அந்த படம் அர்ஜூன் நடித்த ‘யார்’.

திரைப்பட வினியோகிஸ்தராக இருந்த கலைபுலி எஸ்.தாணு முதல் முதலாக தயாரித்த திரைப்படம் ‘யார்’. இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு அவர் பல நடிகர்களை தேடினார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் எந்த நடிகரும் நடிக்க விரும்பாததை அடுத்து ‘நன்றி’ என்ற திரைப்படத்தில் அப்போது நடித்து பிரபலமாகிக் கொண்டிருந்த அர்ஜுனை தேர்வு செய்தார்.

ரஜினிக்கு இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தும் வாய்ப்பு கிடைக்காதது ஏன்? தேவாவின் இசை வாழ்க்கை..!

அர்ஜூன், நளினி இந்த படத்தின் நாயகன், நாயகி என முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர், நிழல்கள் ரவி, ஜெயசித்ரா, செந்தில், டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்தனர்.

yaar1

இந்த படத்தின் கதைப்படி எட்டு கிரகங்கள் பூமியின் அருகே ஒரே நேர்கோட்டில் அமையும் நேரத்தில் ஒரு அமானுஷ்ய அதிசயம் நடக்கிறது. அந்த நேரத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையின் தாயார், குழந்தை பிறந்த பிறகு உடனே இறந்து விடுகிறார். அனாதையாக வளரும் அந்த குழந்தை ஒருவரால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.

சிறுவனாக சாதாரணமாக வளருகிறது அந்தக் குழந்தை. ஆனால் 18 வயது இளைஞன் ஆனதும் சில விசித்திரமான சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நிலையில் அந்த இளைஞன் சாத்தானின் மகன் என்று தெரிய வருகிறது. இதனை அடுத்து தீய சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அர்ஜுன் மற்றும் நளினி களத்தில் இறங்குகிறார்கள். இருவரும் இணைந்து அந்த சாத்தானை எப்படி அழிக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை.

yaar13

இந்த படத்தின் கிளைமாக்ஸில் அர்ஜுன் மற்றும் நளினி சாத்தானிடம் போரிடும்போது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து பொதுமக்களும் பிரார்த்தனை செய்வது போன்ற ஒரு காட்சி வரும். அப்போது இந்த பிரார்த்தனையில் ஒரு விஐபியும் இருந்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு கருதினார்.

ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்து நடித்துள்ளார்களா? எத்தனை படங்கள் தெரியுமா?

ஏற்கனவே ரஜினியின் ‘பைரவி’ மற்றும் ‘கைகொடுக்கும் கை’ படங்களை கலைபுலி எஸ்.தாணு விநியோகம் செய்திருந்தால் ரஜினிக்கு நெருக்கமாக இருந்தார். அப்போது அவர் ரஜினியை நேரில் சந்தித்து, ‘இந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் நீங்கள் நடிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதையடுத்து பொதுமக்கள் பிரார்த்தனை செய்வது போல் ராகவேந்திரர் சுவாமியின் முன் அவர் பிரார்த்தனை செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

இந்த காட்சி ரஜினியின் வீட்டிலேயே எடுக்கப்பட்டது. ரஜினியின் வீட்டிலேயே அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. இந்த காட்சியை படமாக்கி முடித்தவுடன் கலைபுலி எஸ்.தாணுவை அழைத்த ரஜினி, ‘இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை எந்த காரணத்தை முன்னிட்டும் பட விளம்பரத்தில் பயன்படுத்தக்கூடாது’ என்று நிபந்தனை விதித்தார்.

அந்த நிபந்தனையை கலைபுலி எஸ்.தாணு ஏற்றுக் கொண்டார். படம் வெளியான முதல் நாள் அன்று இது பேய் படம் என்று பலரால் விமர்சனம் செய்யப்பட்டது. இதனால் படம் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. அப்போதுதான் தூர்தஷனின் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு சாமி பாடலை ஒளிபரப்பி இது பேய் படம் இல்ல சாமி படம் என்று தாணு வித்தியாசமாக விளம்பரப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் சில பெண்களை செட்டப் செய்து சாமி வந்தது போல் ஆட வைத்ததாகவும், அந்த செய்தி பத்திரிகைகள் மூலம் தமிழகம் முழுவதும் பரவியதை அடுத்து இது சாமி படம் என்று மக்கள் கொண்டாடினர் என்றும், திரையரங்குகளுக்கு கூட்டம் வரத் தொடங்கியது என்றும் ஒரு பேட்டியில் கலைபுலி எஸ்.தாணு கூறியிருந்தார். அந்த வகையில் ‘யார்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

yaar12

‘யார்’ படம் பார்த்த அனைவரும் ரஜினியை ஒரு சில நிமிடங்கள் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த படத்தின் 90வது நாள் ரஜினியின் பிறந்த நாளாக அமைய, ‘யார்’ படத்தின் 90வது நாள் ரஜினியின் பிறந்தநாள் என பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். ரஜினியும் அந்த விளம்பரத்தை பார்த்து புத்திசாலித்தனமாக விளம்பரம் செய்து உள்ளீர்கள் என்று பாராட்டினார்.

சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

அதேபோல் இந்த படத்தில் நூறாவது நாளில் அர்ஜுனுக்கு சென்னையில் உள்ள திரையரங்கில் 100 அடி கட் அவுட் வைத்ததும் கலைபுலி எஸ்.தாணுதான். அந்த காலத்தில் பெரிய நடிகர்களுக்கு கூட 100 அடி கட் அவுட் வைக்கப்படாத நிலையில் அர்ஜுனனுக்கு வைத்து அசத்தினார். மொத்தத்தில் கலைபுலி எஸ்.தாணு அவர்களின் முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.