ஜோதிகா பேச்சில் நியாயமில்லை- காயத்ரி ரகுராம்

ஜோதிகாவின் தஞ்சாவூர் கோவில் பற்றிய பேச்சு சமீப காலமாக வைரலாகி வருகிறது. கோவில் பராமரிக்கும் செலவுக்கு ஆஸ்பத்திரி, கல்விக்கூடங்கள் கட்டலாமே என்ற அவரின் பேச்சு தஞ்சை கோவில் உணர்வாளர்களை எரிச்சலடைய செய்துள்ளது. இந்த நிலையில்…

ஜோதிகாவின் தஞ்சாவூர் கோவில் பற்றிய பேச்சு சமீப காலமாக வைரலாகி வருகிறது. கோவில் பராமரிக்கும் செலவுக்கு ஆஸ்பத்திரி, கல்விக்கூடங்கள் கட்டலாமே என்ற அவரின் பேச்சு தஞ்சை கோவில் உணர்வாளர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

a2d4360b84d49c6db35acb420ab52e46-1

இந்த நிலையில் கோவில் பற்றிய ஜோதிகாவின் பேச்சுக்கு அவர் சார்ந்த ஆதரவாளர்கள் பலரும் ஆதரவளித்து வருகின்றனர். திராவிடர் கழகம் , சூர்யா ரசிகர்கள் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 நடிகர்களுக்கு கோவில் கட்டுபவர்களுக்கு அவ்வளவுதான் அறிவு. இப்படிப்பட்டவர்கள் எப்போதுமே சனாதன தர்மத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களின் மூளை அவ்வளவுதான். தி.மு.க, தி.க., நாம் தமிழர், விடுதலைசிறுத்தைகள் கட்சிகளின் ஏவலர்கள் ஆதாரமற்ற கருத்துகளுடன் வருகின்றனர். 

ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது. தனது பேச்சுக்காக ஜோதிகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை. பிரபலமாக இருக்கும் அவர் உண்மையற்ற தகவல்களை பரப்ப கூடாது. ஜோதிகா மீது எனக்கு வெறுப்பு இல்லை. மேடையில் பேசும்போது கவனமாக பேச வேண்டும். இந்து பற்றி பேசும்போது மற்ற மதங்களையும் உள்ளடக்கி பேசி இருக்கலாம்.”இவ்வாறு இவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன