சென்சார் போர்டின் கடுமையான எதிர்ப்புகள் மற்றும் நீதிமன்ற போராட்டங்களுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கை வாரியம் இந்தப் படத்தை முடக்க நினைத்த நிலையில், நீதிமன்றத்தின் தலையீடு படக்குழுவிற்கு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. ஆனால் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளதால் இப்போதைக்கு ரிலீஸ் இல்லை என தெரிகிறது.
இருப்பினும், தணிக்கை சான்றிதழ் கிடைத்தாலும், படத்தை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டாம் என நடிகர் விஜய் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. “தப்பு பண்ணிட்டியே சிங்காரம்.. நீ ஜனநாயகன் படத்தை தொட்டிருக்க கூடாது” என்று எதிர்தரப்பை எச்சரிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வரும் வேளையில், விஜய்யின் இந்த திட்டமிட்ட நகர்வு அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
படத்தின் தயாரிப்பாளரிடம் விஜய் இது குறித்து தனிப்பட்ட முறையில் பேசியதாக கூறப்படுகிறது. சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டாலும், படத்தை தியேட்டரில் வெளியிட இது சரியான தருணம் அல்ல என்று அவர் கருதுகிறார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலுக்கு சரியாக 10 நாட்களுக்கு முன்னதாக படத்தை திரையிட விஜய் அறிவுறுத்தியுள்ளாராம். தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிடுவதன் மூலம், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் படத்தின் அரசியல் கருத்துக்கள் சென்றடையும் என்று அவர் கணக்கு போடுகிறார். இந்த திட்டத்தினால் தயாரிப்பாளருக்கு ஏதேனும் நிதி நெருக்கடி அல்லது நஷ்டம் ஏற்பட்டால், அதை தானே முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் விஜய் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.
தணிக்கை வாரியத்தின் முட்டுக்கட்டைகளை தாண்டி படம் வெளிவருவது ஒரு பக்கம் இருந்தாலும், அதைத் தேர்தல் நேரத்தில் வெளியிடுவது என்பது ஒரு மிகச்சிறந்த அரசியல் யுக்தியாக பார்க்கப்படுகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள அனல் பறக்கும் வசனங்களும், சமகால அரசியல் அவலங்களை சுட்டிக்காட்டும் காட்சிகளும் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என விஜய் நம்புகிறார். ஏற்கனவே ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு சென்சார் சர்ச்சையினால் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு படம் வெளியானால், அது தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
விஜய்யின் இந்த திடீர் முடிவால் ஆளும் தரப்பு சற்று திணறி போயுள்ளது. படத்தை இப்போதே ரிலீஸ் செய்ய அனுமதித்துவிட்டால் அதன் தாக்கம் தேர்தல் நேரத்தில் இருக்காது என்று கணக்கு போட்டவர்களுக்கு, விஜய்யின் ‘ஹோல்ட்’ பிளான் ஒரு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. தேர்தல் நேரத்தில் படத்தை வெளியிடுவதன் மூலம் மக்களிடையே ஒரு மிகப்பெரிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதே விஜய்யின் ஒரே நோக்கமாக இருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை கவரும் வகையில் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதால், அதன் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதில் அவர் மிகவும் உறுதியாக இருக்கிறார்.
“ஜனநாயகன் ரிலீஸாகும் போது தெறி பறக்கும்” என்று ரசிகர்கள் இப்போதே தங்களது கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டனர். தியேட்டர் மற்றும் ஓடிடி என இரண்டு தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது என்பது படத்தின் வசூலை பாதிக்கும் என்று ஒரு தரப்பினர் கூறினாலும், விஜய்யை பொறுத்தவரை இது வசூலுக்கான படம் அல்ல, இது மாற்றத்திற்கான படம் என்பதில் தெளிவாக இருக்கிறார். அதனால் தான் நஷ்டம் வந்தால் தான் பார்த்து கொள்வதாகத் தயாரிப்பாளரிடம் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த துணிச்சலான முடிவு, அவரது அரசியல் முதிர்ச்சியை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும் வேளையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒரு வெடிகுண்டாக மாறப்போவது உறுதி. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த அரசியல் ஆட்டம், திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என அவரது தொண்டர்கள் நம்புகின்றனர். சென்சார் அதிகாரிகள் செய்த ஒவ்வொரு தடையையும் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்ட விஜய்யின் இந்த விஸ்வரூபம், வரவிருக்கும் தேர்தலில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

