விஜய் நடித்து வரும் ’ஜனநாயகன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சற்று முன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.
தளபதி விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ’ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாகவும், இன்னும் ஒரு அல்லது இரண்டு மாதங்களில் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என்பதும், முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்யின் அறிக்கைகள் தமிழக மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் நேரடியாக மக்களை சந்தித்தால் இன்னும் அதிக ஆர்வத்தை தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்யின் கடைசி திரைப்படமான ’ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விஜய்யின் 14 படங்கள் இதுவரை பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகியுள்ளன, கிட்டத்தட்ட அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன. அந்த பட்டியலில் ’ஜனநாயகன்’ படமும் இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.