Jacquline, Dharsha Gupta and Jacquline : தமிழில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் சில போட்டியாளர்களின் ஆட்டம் அதிகம் கவனம் பெறாத நிலையில் நிறைய குறைகள் இருந்ததாகவும் விஜய் சேதுபதி தொடங்கி ரசிகர்கள் பலரும் தெரிவித்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, போட்டியாளர்கள் மற்றும் விஜய் சேதுபதியின் விமர்சனத்தை கருத்தில் கொண்டு நிறைய பேர் தங்களின் ஆட்டத்தை மாற்றி உள்ளதுடன் ரசிகர்கள் மத்தியிலும் அதிக கவனத்தை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் முதல் வாரம் பல பார்வையாளர்களால் வெறுக்கப்பட்ட ஒருவர் தான் ஜாக்குலின். இவர் விஜய் டிவியின் தொகுப்பாளினியாக சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பின்னர் அவரது ஆட்டமே வித்தியாசமாக இருந்தது. தேவையில்லாமல் எதையாவது பேசிக்கொள்வது, பெண் போட்டியாளர்களுடன் சண்டை போடுவது என ஜாக்குலினின் செயல்பாடுகள் யாரையும் கவராமல் இருக்க கடந்த சில நாட்களாக அவரது ஆட்டமே வேற லெவலில் இருந்து வருகிறது.
டாஸ்க் என வரும்போது தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்யும் ஜாக்குலின், ஆண்கள், பெண்கள் என அனைத்து போட்டியாளர்களுடனும் மிகச் சிறப்பாக பல கதைகளை பேசி வருகிறார். மேலும் தற்போதுள்ள போட்டியாளர்களில் சிறந்த என்டர்டைனராகவும் இருந்து வரும் ஜாக்குலின், அருண் பிரசாத்தின் காதல் பற்றி பேசி கலாய்த்திருந்தது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளால் கவனம் ஈர்த்திருந்தார்.
அதே போல தற்போதும் சத்யாவை அதிகம் ட்ரோல் செய்து கலாய்த்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் கவனம் பெற்று வருகிறது. பிரபல பாடகியான ரம்யா என்எஸ்கேவின் கணவர் தான் நடிகர் சத்யா. இவர் தற்போது போட்டியாளராக நுழைந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் ஒன்றும் நடைபெற்றது.
அப்போது ஆண்கள் அணியினர் அதனை நடத்தும் ஊழியர்களாகவும், பணியாளர்களாகவும் இருக்க அங்கே விருந்தினர்களாக பெண்கள் அணியினர் வருகின்றனர். அந்த சமயத்தில் சத்யாவை அழைத்து தனது கையை மசாஜ் செய்யும்படி தர்ஷா குப்தா கூற, அவருக்கு அருகில் இருக்கும் ஜாக்குலின் யாருக்கோ போன் செய்வது போல சைகை காட்டுகிறார்.
இதற்கு மத்தியில் அருண் பிரசாத்திடம் ஐ லவ் யூ என தர்ஷா கூற, இன்னொரு பக்கம் போனில் பேசும் ஜாக்குலின், “ஹே ரம்யா. எப்படி இருக்கே, நல்லா இருக்கியா?. ஆமா உன் புருஷன் எங்க இருக்கான். அச்சச்சோ, டைவர்ஸ் பண்ண போறியா?” என சத்யா – தர்ஷா ரொமான்ஸை வேடிக்கையாக குறிப்பிடுகிறார். இதைக் கேட்ட தர்ஷா குப்தா அவர் இங்கே ரிசப்ஷனிஸ்ட் என்றும் அதனால் தான் அவர் எனக்கு மசாஜ் செய்கிறார் என்றும் காரணம் கூறினாலும் ஜாக்குலின் விடாமல் வறுக்கவும் செய்திருந்தார்.