பிக் பாஸ் 8: அர்ச்சனைக்கு போகலையா நீங்க.. சைலண்டா இருந்த அருணை காதலி பெயர் சொல்லி வம்பிழுத்த ஜாக்குலின்..

Jacquline, Arun Prasath and Archana : தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு பக்கம் டாஸ்க், சண்டைகள் என பரபரப்பான சம்பவங்கள் நிறைந்து சென்றாலும் இன்னொரு பக்கம் ஜாலியான சம்பவங்களும்…

arun prasath archana and jacquline

Jacquline, Arun Prasath and Archana : தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு பக்கம் டாஸ்க், சண்டைகள் என பரபரப்பான சம்பவங்கள் நிறைந்து சென்றாலும் இன்னொரு பக்கம் ஜாலியான சம்பவங்களும் அரங்கேறி தான் வருகிறது. டாஸ்க் மற்றும் போட்டி ஆகியவற்றைத் தாண்டி மற்ற நேரங்களில் போட்டியாளர்கள் பலரும் ஒன்றாக அமர்ந்து நிறைய வேடிக்கையான விஷயங்களையும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீரென சுவாரஸ்யம் குறைவாக இருக்கும் சமயத்தில் இந்த போட்டியாளர்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சவுந்தர்யா பாடல் பாடி நடனமாடி இரவு நேரத்தை கழித்திருந்தது பெரிய அளவில் வைரலாகி இருந்தது. அவருடன் சேர்ந்து ஜெஃப்ரி பாடியதும் ஆடியதும் என அந்த இரவே களைகட்ட, இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்திருந்தது.

இதற்கிடையே சமீபத்தில் நடந்த டாஸ்க்கில் பவித்ராவின் ஆக்டிங், பெண் வேஷம் போட்ட விஷாலின் டான்ஸ், மூன் வாக் மூர்த்தியாக ரஞ்சித் ஹோட்டலுக்குள் நுழைந்தது என நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் பிக் பாஸ் மீதான விறுவிறுப்பையும் அதிகப்படுத்தி இருந்தது. என்னதான் ஒரு பக்கம் சர்ச்சையான சம்பவங்கள் அரங்கேறினாலும் இன்னொரு புறம் ரசிகர்களின் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தும் பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி ஒரு சூழலில் தான் இதன் போட்டியாளராக இருக்கும் சீரியல் நடிகர் அருண் பிரசாத்தை ஜாக்குலின் உள்ளிட்ட ஒரு சிலர் சேர்ந்து கலாய்த்தது தொடர்பான சம்பவமும் அதன் பின்னணியும் அதிகம் கவனம் பெற்று வருகிறது. கடந்த பிக் பாஸ் சீசனின் வெற்றியாளரும், சீரியல் நடிகையுமான அர்ச்சனா அருண் பிரசாத்தை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

இவர்கள் இருவரின் காதல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் என்று சூழலில் ஒரு முறை சாச்சனா கூட அருண் பிரசாத்தை அதிகம் கலாய்த்திருந்தார். இந்த நிலையில் தற்போது அருண் பிரசாத்திடம் பேசும் ஜாக்குலின், அவரை அர்ச்சனாவின் பெயரை வைத்து மறைமுகமாக கலாய்த்த சம்பவம் என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

ரஞ்சித், சத்யா விஷால் மற்றும் ஜாக்குலின் ஆகியோர் அமர்ந்திருந்து பொழுது போக்கி கொண்டிருக்கின்றனர். அப்போது அருண் பிரசாத்திடம் பேசும் ஜாக்குலின், “நீங்க அர்ச்சனைக்கு போகலையா?” என வேடிக்கையாக கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் அருண் பிரசாத், ‘எதுவும் சொல்ல முடியாத ஒரு சூழலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்’ என கூறி சத்யாவை கவனிக்கும்படி கூறுகிறார்.

இதற்கு பதில் சொல்லும் ஜாக்குலின், அவர் Official அர்ச்சனை செய்து விட்டதாகவும் நீங்கள் Unofficial ஆக இருப்பதாகவும் கூறுகிறார். அதாவது சத்யாவிற்கு ரம்யா என்.எஸ்.கேவுடன் திருமணமாகிவிட்டது என்றும் நீங்கள் தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதையும் தான் ஜாக்குலின் அப்படி குறிப்பிடுகிறார். அவர் அப்படி சொல்லி முடித்ததும் விஜே விஷால், சத்யா உள்ளிட்ட அனைவரும் சத்தமாக சிரிக்கவும் தொடங்கி விடுகின்றனர்.

அருண் பிரசாத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி உள்ளது பற்றி நிறைய வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் அர்ச்சனா பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.