பிக் பாஸ் 8: நீ முத்துகுமரனை லவ் பண்றியா.. வீட்டிற்குள் ஆரம்பிக்க போகும் காதல் டிராக்.. பெண்கள் அணியில் நடந்தது என்ன?

Dharsha Gupta and Jacquline : தமிழில் இதற்கு முன்பாக 7 பிக் பாஸ் சீசன் ஒளிபரப்பாகி முடிந்திருந்த நிலையில் அவை எதிலுமே ஆண்கள் Vs பெண்கள் என போட்டி நடந்தது கிடையாது. ஆனால்…

bigg boss girls about love

Dharsha Gupta and Jacquline : தமிழில் இதற்கு முன்பாக 7 பிக் பாஸ் சீசன் ஒளிபரப்பாகி முடிந்திருந்த நிலையில் அவை எதிலுமே ஆண்கள் Vs பெண்கள் என போட்டி நடந்தது கிடையாது. ஆனால் தற்போது முதல் முறையாக மொத்தம் இருந்த 18 போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் என பிரிக்கப்பட்டிருந்தனர். டாஸ்க் மற்றும் ஷாப்பிங் என போட்டிகள் வரும்போது கூட பெண்கள், ஆண்கள் இருவரும் இணைந்து ஒரே அணியில் இடம் பெறுவதில்லை.

அது மட்டுமில்லாமல் நாமினேஷனில் கூட ஆண்கள் அணியில் இருக்கும் பெரும்பாலானோர் பெண்களை தான் அதிகமாக தேர்வு செய்து வந்தனர். இதுவரை வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்கள் அணியில் 9 பேர் இருந்தும் இன்னும் ஒற்றுமை உள்ளே இல்லை என்பது தான் உண்மை.

அதே நேரத்தில் ஆண்கள் அணியில் இருக்கும் பலரும் தங்கள் அணிக்காக ஆட வேண்டும் என்றும் சில நேரம் தங்களுக்காக ஆட வேண்டும் என்றும் நினைத்திருந்தனர். ஆனால் பெண்கள் அணி என வரும்போது பலருமே தங்களுக்காக மட்டும் விளையாட வேண்டும் என்றும் அணியை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதும் அங்கங்கே பெரிய சிக்கலாக உள்ளது. இதனால் அணிக்குள்ளேயே நிறைய மோதல்கள் நடந்து வரும் நிலையில் தான் சமீபத்தில் உணவு தொடர்பாக சாச்சனா மற்றும் அன்ஸிதா சண்டை போட்டதும், இன்னொரு பக்கம் சவுந்தர்யா அதிகமாக உணவு உண்டதன் பெயரில் அவருடன் சுனிதா உள்ளிட்ட சில பெண் போட்டியாளர்கள் சண்டை போட்டிருந்ததும் பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது.

பெண்கள் அணியில் இருந்து இதுவரை யாரும் எலிமினேட் ஆகாததால் அவர்கள் ஒற்றுமையாக இருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில் சில பெண்கள் அமர்ந்து பிக் பாஸ் வீட்டில் காதல் தொடர்பாக பேசிய விஷயங்கள் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

ஆனந்தி, தர்ஷா குப்தா, தர்சிகா, பவித்ரா உள்ளிட்ட சில பெண்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் ஜாக்குலின். அப்போது அவர் தர்ஷாவை பார்த்து விஷாலை காதல் செய்கிறாயா என்று ஜாலியாக கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் தர்ஷா, ‘அவன் எனக்கு தம்பி மாதிரி’ எனக் கூறியதும், ‘எல்லாரையும் அண்ணன், தம்பின்னு சொல்லிட்டா எப்படி’ என ஆனந்தி கேட்கிறார்.

இதனைத் தொடர்ந்து விஷாலுக்கு பதிலாக முத்துவின் பெயரை தர்ஷாவிடம் ஜாக்குலின் சொல்லி, ‘அவரும் ஒரு பேச்சாளர், நீயும் ஒரு பேச்சாளர்’ என தொடர்ந்து அவரை கலாய்க்கிறார். இறுதியில் முத்துக்குமரனும் தன்னைவிட வயது குறைந்தவர் என தர்ஷா சொல்லி தம்பி மாதிரி என நழுவுகிறார். ஹிந்தி உள்ளிட்ட பிக் பாஸ் சீசனில் அதிகம் காதல் இருந்தாலும் தமிழில் அரிதாக சில காதல் எபிசோடும் இதற்கு முன் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.