எம்ஜிஆர் படங்களில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்டாக இதுதான் காரணமா?

புரட்சித்தலைவர் படங்கள் என்றாலே பாடல்கள், பைட், காமெடி, சென்டிமென்ட்னு எல்லாமே சூப்பரா இருக்கும். குறிப்பாக பாடல்களும், அதைப் படமாக்கிய விதமும் ரொம்பவே அருமையாக இருக்கும். அதிலும் எம்ஜிஆரின் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். காதல் மற்றும் தத்துவப்பாடல்கள்.

காதல் பாடல்களைப் பார்த்தாலும் தேன் சொட்டும் ரகமாகத் தான் இருக்கும்.  கனிய கனிய மழலைப் பேசும், அன்பே வா, முத்தமா மோகமா, கன்னத்தில் என்னடி காயம், நடையா இது நடையா, ராஜாவின் பார்வை, சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ ஆகிய பாடல்கள் அருமையாக இருக்கும்.

MGR
MGR

அதே போல தத்துவப் பாடல்களில் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நல்ல பேரை வாங்க வேண்டும், நாலு பக்கம் சுவரு, ஏச்சிப் பிழைக்கும், நாடு அதை நாடு, கொடுத்ததெல்லாம் கொடுத்தான், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, அதோ அந்தப் பறவை, வேட்டையாடு விளையாடு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தப் பாடல்கள் எல்லாமே எம்ஜிஆருக்குன்னு எழுதுவாங்களா? எல்லாமே எப்படி இவ்ளோ சூப்பர்ஹிட்டாச்சுன்னு ஆச்சரியமாக இருக்கும். இதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆருடைய பாடல்களில் பெரும்பாலானவை அதாவது 90ல் இருந்து 95 சதவீதம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவருடைய இசை அமைப்பாளர் யாராக இருந்தாலும் எம்ஜிஆர் அதிலே காட்டிய கவனம்.

பாடல்களின் மெட்டுகளில் அவர் எந்தளவுக்குக் கவனம் செலுத்துவார் என்று பல இசை அமைப்பாளர்கள் சொல்லியிருக்காங்க.

அதே மாதிரி அந்தப் பாடலைப் படமாக்குவது பற்றி அவர் எந்தளவுக்கு மெனக்கிடுவார் என்ற பல இயக்குனர்கள் சொல்லி இருக்காங்க. அவர் அளவுக்கு பாடல் பதிவிலும், பாடல் காட்சி படமாவதிலும் இப்போதுள்ள எந்தக் கதாநாயகர்களும் கவனம் செலுத்துவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் படங்கள் எப்போது திரையிட்டாலும் பாமர மக்கள் இன்னும் திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக வருவதைக் காணலாம். அவர்களது இதயங்களில் இன்னும் எம்ஜிஆர் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

அது மட்டுமல்லாமல் எம்ஜிஆரின் அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன் போன்ற படங்கள் இப்போதும் ரீ ரிலீஸாகி சரித்திரம் படைத்து வருகின்றன. இதற்கெல்லாம் ஒரே காரணம் புரட்சித்தலைவர் தான் என்றால் மிகையில்லை.