பிக் பாஸ் வீட்டின் நேற்றைய நிகழ்ச்சியில் தட்லாட்டம் பாடலோடு புலர்ந்தது, சாண்டி ஷெரின் உடையை அணிந்துகொண்டு, பெண்ணைப் போல் மேக்கப் போட்டிருந்தார். பைனல்ஸ் செல்ல வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி கூறுமாறு பிக் பாஸ் கூறினார், அதன்படி போட்டியாளர்கள் பேசினர்.
முகின், “கடவுளின் கிருபையால் இங்கு வந்தேன். என்னிடம் உள்ள ஒரு விஷயத்திற்காக மக்கள் வாக்களித்துள்ளார்கள். அன்பு எப்போதும் அநாதை என்பேன், அதை இப்போது வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றார்.

அடுத்து ஷெரின், “அனுபவத்திற்காக இங்கு வந்தேன். ஜெயிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. மக்கள் இந்த இடத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
அடுத்து சாண்டி, “எனக்கு வாக்களித்த அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
காலையில் ஆன்லைனில் உணவு சோமேட்டோ ஆப் மூலம் ஆர்டர் செய்து, ஆர்டர் செய்த உணவு குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி போட்டியாளர்கள் பிரச்சாரம் செய்தனர், டைட்டிலை விட சோறுதான் முக்கியம்னு அப்போ அப்போ நினைவுபடுத்துறார்போல பிக் பாஸ். இப்படியும் ஒரு டாஸ்க்கா? என நொந்து போய் உள்ளனர் பார்வையாளர்கள்.