தனுஷ், நயன்தாரா பிரச்சனையில் இரண்டு பேருக்கும் உள்ள ஈகோ தான். என் படத்தால தான் விக்னேஷ் சிவனே வெளியில் தெரிந்தார். நயன்தாராவுக்கும் கம்பேக் கொடுத்த படம். உங்க ரெண்டு பேரும் என் படத்தாலே தான் வந்தீங்கன்னு தனுஷ் சொல்வாருல்ல.
அப்படி இருக்கும் போது என் அனுமதி இல்லாம எப்படி வீடியோவை யூஸ் பண்ணலாம்? அப்படிங்கற ஆதங்கம் அவருக்கு இருக்கத் தானே செய்யும். அந்த விஷயத்துல நயன்தாரா நீ என்ன சொல்றது? நான் எடுத்துப் போடுவேன்னு சொன்னது தான் எல்லாருக்கும் அவங்க மேல அதிருப்தி. அதனால எல்லாரும் தனுஷ் பக்கம் சாய்ஞ்சிட்டாங்க.
இட்லி கடை
பாஸ்கர் பெரிய தயாரிப்பாளர். அதர்வாவை வச்சிப் படம் பண்றாரு. இட்லி கடையும் அவர் தான் பண்றாரு. அவரது இல்லத் திருமண விழாவுக்கு வந்து ஆக வேண்டிய கட்டாயம். அதனால தனுஷ் வர்றாரு. நயன்தாராவும் கல்யாணத்துல கெத்து காட்டி கால் மேல் கால் போட்டதுன்னு நாறிக்கிட்டுக் கிடந்தது.
இருவரும் மெச்சூரிட்டி
சிம்பு, தனுஷ் இடங்களைத் தாண்டி இன்னைக்கு வேற வேற ஆர்டர்ல சண்டை போயிக்கிட்டு இருக்கு. தனுஷ், சிம்பு ரெண்டு பேரும் ஒரே காலகட்டத்துல வந்தவங்க. இருவரும் மெச்சூரிட்டியா ஆகிட்டாங்க. தனுஷ் 50 கோடியை ராயன் படத்துல ரீச் பண்ணிட்டாரு. அதுக்குப் பிறகு தான் சிவகார்த்திகேயன் வந்தாரு. அமரன் படத்தோட வெற்றியை மட்டும் வச்சிக்கிட்டு விஜய் இடத்துக்குப் போக முடியாது. சுதா கொங்கரா படத்துக்கு 50 கோடி சம்பளம். ஆனால் அமரன் என்ற வெற்றியை மட்டும் வச்சிக்கிட்டு விஜய் இடத்துக்குப் போயிட முடியாது.
காதல் – முத்தமிடும் போட்டோ
மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் சபையர் தெரிவித்துள்ளார். தனுஷ், சிம்பு இருவரும் மெச்சூரிட்டியானவர்கள். தனுஷ் போல சிம்புவும் நயன்தாராவால் பாதிக்கப்பட்டுள்ளார். அது பாடல் திருட்டு, இது காதல் திருட்டு. வல்லவன்படத்தில் சிம்புவுடன் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. இருவரும் முத்தமிடும் போட்டோக்கள் வைரலாயின.
இதனால் இருவரும் பிரிந்தனர். அப்போது நயன்தாராவின் அனுமதி இல்லாமல் சிம்பு தான் இந்த போட்டோக்களை வெளியிட்டாராம். ஆனால் இருதரப்பிலும் இதற்கான விளக்கம் இல்லை. அப்படிப் பார்க்கும்போது சிம்புவும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனுஷூக்கு ஆதராவாக இருப்பார் என்றே தெரிகிறது.