அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து இன்று தனக்கென தனி இடத்தை சினிமாவில் பிடித்திருக்கிறார். கார் ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் குமார் தனது 18-வது வயதில் இருந்தே கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். அப்போதே மாடலிங்கும் செய்து வந்தார் அஜித்குமார். அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித் குமார் ஆசை, காதல் மன்னன், வாலி போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தார். 2000 கால கட்டத்திற்கு பிறகு பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் அஜித்குமார்.
நடிகராக இருந்தாலும் கூட அஜித்குமார் கார் ரேசிங்கில் அவ்வபோது பங்கேற்று வந்தார். தற்போது இவரது அணி கார் ரேசிங்களில் பங்கேற்று வருகிறது. முதல் கட்டமாக இவரது அணி மூன்றாவது இடத்தை பிடித்து இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்தது. அதற்காக இவருக்கு பத்ம பூஷன் விருது கூட வழங்கப்பட்டது.
இந்நிலையில் அஜித்குமாரை ரசிகர்கள் கடவுளே அஜித்தே என்று கூப்பிட்டு வந்தனர். அதை கூப்பிட வேண்டாம் என்று கூட அஜித்குமார் கூறியிருந்தார். ஆனால் அவர் எவ்வளவு நகைச்சுவையான மனிதர் என்பதை விடாமுயற்சி படத்தில் சவதீகா பாடலில் அவருடன் நடனம் ஆடிய சௌமியா பாரதி என்ற நடிகை பகிர்ந்திருக்கிறார்.
சௌமியா பாரதி கூறியது என்னவென்றால், ஒருமுறை விடாமுயற்சி படபிடிப்பில் இருக்கும்போது மிகுந்த கலைப்புடன் கடவுளே என்று அமர்ந்த அஜித் சார் அஜித்தே என்று என்னை பார்த்து கூறி சிரித்தார். நான் ஒரு நிமிடம் ஷாக் ஆகிவிட்டேன். அவருடைய நகைச்சுவை உணர்வு என்பது மிகவும் அற்புதமானது என்று அஜித்தை பற்றிய ரகசியத்தை பகிர்ந்து இருக்கிறார்.
