சென்னையில் களைகட்டிய ரோபோ சங்கர் மகளின் ரிசப்ஷன்!.. கமல் முதல் ராமராஜன் வரை.. இத்தனை பேரா!..

By Sarath

Published:

மதுரையில் ரோபோ சங்கர் மகள் திருமணம் கடந்த மார்ச் 24ம் தேதி நடைபெற்ற நிலையில், சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில், தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

காமெடி நடிகர் ரோபோ சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமெடி செய்து வந்த நிலையில், அப்படியே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அடுத்து கார்த்தி, அதிதி சங்கர் நடித்த விருமன் படத்திலும் இந்திரஜா நடித்திருந்தார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் என் இந்திரஜா சங்கர். தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது மாமன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கமல்ஹாசன், ராமராஜன் பங்கேற்பு:

மதுரையில் திருமணம் நடைபெற்ற நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்துறை பிரபலங்கள் பங்கேற்க சென்னையில் இன்று தடபுடல் விருந்துடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன், ராமராஜன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மேலும், மேலும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும், விஜய் டிவி நடிகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

மதுரையில் திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற வரவேற்புரை காட்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நடிகர் சூரி சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இந்திரஜாவையும் கார்த்தியையும் வாழ்த்தியுள்ளார்.

மெருன் கலர் கோட்டு அணிந்து கொண்டு மாப்பிள்ளை கார்த்தி மஜாவாக போஸ் கொடுத்து நிற்கிறார். பிங்க் நிற சேலையில் இந்திரஜா சங்கர் மணப்பெண்ணாக ஜொலிக்கிறார். வரும் பிரபலங்கள் எல்லாம் ஒரு நிமிடம் நின்று வாழ்த்திவிட்டு செல்கின்றனர்.

சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மக்கள் பங்கேற்று வரும் நிலையில், கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது.