இந்தியன் 3 படம் திரையரங்குகளில் வெளியாகாது என்றும் லைகா நிறுவனம் அந்தப் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாகவும் வரும் தகவல்கள் உண்மையா? அந்தப் படம் டைரக்டா ஓடிடியில ரிலீஸ் ஆனா டைரக்டர் ஷங்கர் சார் அதுக்கு சம்மதிப்பாரான்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் என்ன பதில் சொல்றாருன்னு பார்க்கலாமா…
இன்றைக்கு உள்ள சூழ்நிலையைப் பார்க்கும்போது இந்தியன் 3 படம் திரையரங்குகளில் வெளியாகுற வாய்ப்புகள் ரொம்ப குறைவா இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 3 படத்தை லைகா கைவிட்ட நிலையில் படம் டிராப் என செய்திகள் வெளியாயின. இந்தியன் 3 படத்துக்கு இன்னும் மவுசு குறையவில்லை. ஏன்னா கமல் இந்தியன் 3 படத்தின் கதையைக் கேட்டுத்தான் இந்தியன் 2லயே நடிக்க சம்மதித்தேன் என்றாராம். அதே போல இந்தியன் 2 படம் மிக நீளமாக இருந்ததால் கடைசி நேரத்தில் கட் பண்ணி இந்தியன் 3 ஆக ஒரு படத்தை ரெடி பண்ணினார்களாம்.
அதனால் ரசிகர்களுக்குப் பிடித்த பல காட்சிகளும் இந்தியன் 3ல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் இந்தியன் 3 படத்துக்கு 10 நாள் சூட்டிங் பாக்கி இருக்கு என்று இயக்குனர் ஷங்கர் சொன்னாராம். ஒரு பாடல் பெரும் செலவில் எடுக்க வேண்டியுள்ளது என்றாராம். இதனால் மீண்டும் மீண்டும் செலவழிக்க முடியாது என ஒதுங்கிக் கொண்டதாம். இந்த நிலையில் இந்தப் படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் எடுக்க ஒத்துக்கொண்டதாகவும் தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.