சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்தியன் 2 படப்பிடிப்பு! லேட்டஸ்ட் அப்டேட்!

By Velmurugan

Published:

இந்திய அளவில் மிக பெரிய எதிர்பார்ப்புள்ள இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்து மாஸான அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழில் 27 வருடங்களுக்கு முன்னதாக வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் கொடுத்தது . இதில் கமல், சுகன்யா, மனிஷா கொய்ராலா, நெடுமுடி வேணு, செந்தில் , கவுண்டமணி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

தற்போழுது இந்தியன் இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் விவேக், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, மனோபாலா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்,அனிருத் ஆகிய இருவரும் இணைந்து இசை அமைக்கின்றனர்.

இந்தியன் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு மூன்றாண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டது.ஆனால் இதில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதற்குப்பின் இயக்குனர் ஷங்கர் இந்தியன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடிக்காமல் ராம்சரனின் புதிய படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்ட துவங்கினார்.

தற்போழுது மீண்டும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக தொடங்கியுள்ள நிலையில் இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியன் இரண்டாம் பாகம் பொங்கல் அன்று வெளியிடப்பட குழு முடிவு செய்துள்ளதாகவும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

அதேபோல இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகளும் கிராபிக்ஸ் பணிகளும் வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் தகவல் கிடைத்துள்ளது. கமல்ஹாசனின் விக்ரம் படத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பண மோசடியில் வசமாக சிக்கிய ராஷ்மிகா! அதுவும் 80 லட்சம் மோசடி…

இந்நிலையில் இந்த படப்பிடிப்பு குறித்து மாஸான அறிவிப்பு தற்போழுது வைரலாகி வருகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. GST வரியுடன் சேர்த்து 1.24 கோடி செலுத்தி விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளனர்.ஆனால் விமான நிலைய காவல் நிலையத்தில் அனுமதி பெற வில்லை என தகவல் வெளியாகியுள்ளது.