பணத்தை இழந்த ராஷ்மிகா… அதுவும் 80 லட்சம்!

கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ராஷ்மிகா அதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து நாடெங்கிலும் பெரிய புகழ் பெற்றார். தற்போழுது தென்னிந்திய சினிமாவை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்து மிக பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விஜய் நடித்த வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் ‘ஏ சாமி ஏ சாமி’ என்ற பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்த ராஷ்மிகா நேஷனல் கிரஸ் ஆக மாறி இளைஞர்களின் மனதை கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜர் அவரிடம் இருந்து 80 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் இவரை அவருடைய மேனேஜரே ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராஸ்மிகா மந்தனாவிடம் நீண்ட நாட்களாக மேனேஜராக ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பண மோசடி செய்த நிலையில், அதை தெரிந்து கொண்ட நடிகை ராஸ்மிகா அவரை உடனே வேலையை விட்டு நீக்கியுள்ளார். மேலும் அவரின் மேனேஜர் மொத்தமாக 80 லட்சம் பண மோசடி செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த சம்பவம் குறித்து ராஷ்மிகா இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

இயக்கத்திற்கு குட் பை சொல்லும் லோகேஷ்! ஹீரோ ஆகும் ஆசை வந்துவிட்டதோ?

தற்போது அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்திப்பர்மாவின் இயக்கத்தில் ஹிந்தியில் ரன்பீர் கபூர் நடித்து வரும் அனிமல் படத்திலும், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் ரெயின்போ படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...