இந்தியன் 2 படத்துக்கு ரிலீஸ் தேதி இதுதான்…! கமலுக்கு திருப்பதி பிரதர்ஸ் போட்ட ஸ்கெட்ச்..!

By Sankar Velu

Published:

இந்தியன் 2 படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டு வந்துள்ளது. நாளுக்கு நாள் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. முதலில் ஜூன் மாதம் படம் ரிலீஸ் என்றார்கள்.

அதன்பிறகு படத்திற்கு ஒரு பாடல் பாக்கி உள்ளது என்றும் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக உள்ளது என்றும் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாதத்திற்கு என்றார்கள். ஒரு சிலர் ஆகஸ்ட் என்கிறார்கள் எது சரி என்று பார்ப்போம். இதற்கிடையில் கமல் மீது லிங்குசாமி கொடுத்த புகார் எந்த நிலையில் உள்ளது என்பதும் பற்றி பார்க்கலாம்.

இந்தியன் 2 படத்தை ஜூலை மாதம் வெளியிடலாம் என டைரக்டர் ஷங்கர் முடிவு பண்ணினாராம். அதே போல அவரது கேம் சேஞ்சர் என்ற தெலுங்கு படத்தின் ரிலீஸ் தேதியும் இந்தியன் பட ரிலீஸை ஒட்டித் தான் வர உள்ளதாம். தகவல்கள் வந்தன.

ஜூலை 17 என்பது உறுதியா என்றால் அது ஷங்கர் கையில் தான் உள்ளது. கல்கி படமும் அப்போது தான் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

அதனால் எல்லாப் படங்களுக்கான கேப்பையும் கணக்கிட்டுத் தான் ஷங்கர் இந்தத் தேதியை முடிவு பண்ணியுள்ளாராம். அதே போல கமல் ரசிகர்களே இப்போது படம் தள்ளிப் போவதால் வெறுப்பில் உள்ளார்களாம். கமல் ரொம்ப லேட் பண்ணாதீங்க. ஜூலை 17லேயே ரிலீஸ் பண்ணிடுங்கன்னும் சொல்லி இருக்கிறாராம். தக் லைஃப் படத்தின் குளோசப் காட்சிகளை எல்லாம் கடந்த 2 நாளாக ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ல சூட்டிங் எடுத்துக்கிட்டு இருந்தாங்களாம்.

இந்தநிலையில் கமலை சந்திக்க தமிழ்ப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பொதுக்குழுவின் சில முக்கிய உறுப்பினர்கள் வருகிறார்களாம். இவர்கள் லிங்குசாமியின் பிரதர் சுபாஷ்சந்திரபோஸ் கொடுத்த புகாரைப் பற்றி விசாரிக்க வருகிறார்களாம். அவர்களைக் கமல் சந்திப்பாரா? உத்தமவில்லன் படம் சரியாகப் போகாததால் அடுத்த படத்தில் பார்க்கலாம் என்று கமல் சொல்லி இருந்தாராம்.

Uthama villain
Uthama villain

கமலுக்கு ரெட்கார்டு கொடுக்க திருப்பதி பிரதர்ஸ் வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார்களாம். உத்தமவில்லன் படத்திற்குப் பதிலாக இன்னொரு படம் நடித்துத் தருகிறேன் என கடந்த 9 வருடங்களாக சொல்லி ஏமாற்றி வருகிறார் என்கின்றனர். சுபாஷ் சந்திரபோஸ், லிங்குசாமி குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்களாம்.

இந்த நிலையில் கமல் எவ்வித பதிலும் சொல்லாமல் இருக்கிறார். ஒரு மூத்த நடிகர் தயாரிப்பாளர் சங்கத்தை மதிக்காமல் இப்படி நடக்கலாமா என்றும் பேசி வருகிறார்களாம். ஆனால் ஒரு மூத்த நடிகருக்கு ரெட்கார்டு போட வேண்டாம் என்றும் பேசுகிறார்களாம்.

அதே போல சங்கத்திற்குள் பேச வேண்டிய விஷயங்களை வெளியில் கொண்டு வந்ததால் கமல் தரப்பினர் அதிருப்தியில் உள்ளதாகவும் சொல்கின்றனர். திருப்பதி பிரதர்ஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். முடிந்ததும் செய்தியாளர்களை சந்திக்காமலேயே திருப்பதி பிரதர்ஸ் போய்விட்டார்களாம். தற்போது உத்தமவில்லன் பிரச்சனை எந்தத் திசையை நோக்கிப் போகிறது என்றே தெரியவில்லை என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.