தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவர் பல கோடிகளில் சம்பளம் பெறுகிறார் என இவர் மீது விமர்சனங்களும் உள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை வருமான வரித்துறையினர் அழைத்து சென்றனர். அவரது வீடுகளில் தொடர் சோதனை நடத்தி கணக்கில் காட்டப்படாத பணத்தை பறிமுதல் செய்தனர்.
இது நடந்து சில நாட்களான நிலையில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் ரெய்டு செய்வதாக தவறான தகவல் வெளியானது. இதை வருமானவரித்துறையினர் மறுத்துள்ளனர். நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தவில்லை, ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக வருமானவரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.