இசைஞானி இளையாராஜா இசையமைப்பது மட்டுமன்றி பல பாடல்களையும் பாடியிருக்கிறார். ஆனால் அவர் சிறந்த கவிஞர் என்பது பலருக்கும் தெரியாத தகவல். இப்படி இயல், இசையும் ஒருங்கே அமைந்து விளையாடும் சரஸ்வதியின் ஞானக் குழந்தையாய் நம்மையெல்லாம் தனது இசையால் ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் இளையராஜா கன்னடத்தில் பாடல் ஒன்றை அவரே எழுதி மெட்டமைக்க அந்தப் பாடல்சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது.
கன்னடத்தில் கடந்த 1996-ம் ஆண்டில் சிவ்ராஜ்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிவாசெயின்யா. கன்னட இயக்குநர் சிவமணி இப்படத்தினை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா.
சித்தி சீரியலில் நடந்த அவமானம்.. அத்தோடு நடிப்புக்கு முழுக்குப் போட்ட சிவக்குமார்.. இதான் காரணமா?
இப்படத்தில் ஒரு காட்சி வரும். ஜெயிலில் ஒரு குழந்தை வருவது போன்ற அந்தக் காட்சிக்கு இளையராஜா டியூன் போட்டுக் கொடுத்திருக்கிறார். அப்போது இளையராஜாவைச் சுற்றி நான்கு கவிஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். வெகு நேரமாகியும் ஒருத்திடமிருந்தும் வரிகள் ஏதும் வரவில்லை. பொறுத்துப் பார்த்த இளையராஜா தானே பாடல் எழுத ஆரம்பித்தார்.
அப்படி உருவான பாடல் தான் “ஜெயிலலி ஹட்டி பயலிகே பண்டே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா.. ” இந்தப் பாடலின் முதல் வரியை எழுத ஆரம்பித்த இளையராஜா தொடர்ந்து முழுப் பாட்டையும் எழுதி முடித்துள்ளார். இப்பாடலில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஜெயிலில் சிவ்ராஜ்குமார் ஆடுவதாக அமைந்திருக்கும். மேலும் பாடலின் அர்த்தமானது ஜெயிலில் பிறந்து வெளியே சென்றாய் கிருஷ்ணா.. வெளியே இருந்து ஜெயிலுக்குள் வந்தாய் கிருஷ்ணா என்று அமைந்திருக்கும்.
இந்தப் பாடல் படத்தில் சூப்பர் ஹிட் ஆனது. இதே போல் தமிழிலிலும் சில பாடல்களை எழுதியிருக்கிறார் இளையராஜா. குறிப்பாக இதயம் ஒரு கோவில் பாடல் இவர் எழுதியது தான். இப்பாட்டின் வரிகளில் வரும் உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே, என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே.. என்ற வரிகள் இசை ரசிகர்கள் மத்தியில் இளையராஜாவின் மகிமையை உணர்த்தியது.