உன் இஷ்டத்துக்கு டியூன் போட முடியாது.. கடுப்பான இளையராஜா.. ஆர்.கே.செல்வமணிக்கு கொடுத்த சூப்பர் ஹிட் பாடல்

புலன் விசாரணை படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜயகாந்த், ராவுத்தர், ஆர்.கே.செல்வமணி கூட்டணியில் உருவான மெகாஹிட் திரைப்படம் தான் கேப்டன் பிரபாகரன்.பல்வேறு வகைகளில் இந்தப் படம் சிறப்பு பெறுகிறது. எப்படியென்றால் விஜயகாந்தின் 100-வது…

Captain Prabakaran

புலன் விசாரணை படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜயகாந்த், ராவுத்தர், ஆர்.கே.செல்வமணி கூட்டணியில் உருவான மெகாஹிட் திரைப்படம் தான் கேப்டன் பிரபாகரன்.பல்வேறு வகைகளில் இந்தப் படம் சிறப்பு பெறுகிறது. எப்படியென்றால் விஜயகாந்தின் 100-வது படம்.

மேலும் இந்தப் படத்திலிருந்து புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கேப்டன் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். அடுத்ததாக தமிழிழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெயரையே இந்தப் படத்திற்கும் டைட்டிலாக வைத்தார்கள். கதையானது சந்தன மரக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டது. இப்படி பல சிறப்புகளைப் பெற்ற கேப்டன் பிரபாகரன் படத்தின் வெற்றி அப்போதுள்ள ரஜினி, கமல், மோகன், ராமராஜன் உள்ளிட்ட ஹீரோக்களை அதிர வைத்தது.

கேப்டன் விஜயகாந்தின் பக்கா ஆக்சன் திரைப்படமாக விளங்கிய இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆர்.கே.செல்வமணியின் திரைக்கதையும், இளையராஜாவின் பின்னனி இசையும் படத்தினை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்த்தியது. இயக்குநர் ஆர்.கே.செல்மணி முதலில் இந்தப் படத்திற்கு பாடல்களே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தார். அப்போது இளையராஜா படத்தில் இரண்டு பாடல்களாக வைக்கும்படி யோசனை கூற பிறந்தது தான் ஆட்டமா தேரோட்டமா மற்றும் பாசமுள்ள பாண்டியரே ஆகிய பாடல்கள்.

கந்த சஷ்டி கவசத்தை காப்பியடித்த சூரியன் பட 18 வயது பாடல்.. ஏன் அப்படி செஞ்சாங்க தெரியுமா?

பாடகி ஸ்வர்ணலதாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் என்றும் அழியாப் புகழ் கொண்ட ஆட்டமா.. தேரோட்டமா பாடலுக்கு இளையராஜா முதலில் வேறொரு டியூனைப் போட்டிருக்கிறார். அதனைக் கேட்ட ஆர்.கே.செல்வமணி அது வேண்டாம் என்றிருக்கிறார். அப்போது இளையராஜா கடுப்பாகி கம்போஸிங்கிலும் வரவில்லை பின்னர் ரெக்கார்டிங் செய்துவிட்டு பிடிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம் என்று ஆர்.கே.செல்வமணியிடம் கோபித்துள்ளார்.

மேலும் எப்படி வேண்டும் என்று கேட்க, ஆர்.கே.செல்மணி இந்தி ஷோலே படத்தின் பாடலைப் போன்று வேண்டும் என்று கேட்க, அன்றைய தினமே உருவானது தான் ‘ஆட்டமா தேரோட்டமா பாடல்..’ இந்தப் பாடல் மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. இந்தப் பாடலை கவிஞர் பிறைசூடன் இயற்றியிருந்தார். இன்னும் இளையராஜாவின் வேகப் பாடல்களில் ஆட்டமா தேரோட்டமா முன்னணி இடத்தில் இருக்கிறது என்றால் இசைஞானியின் திறமையைப் பார்த்துக் கொள்ளுங்கள்.