கந்த சஷ்டி கவசத்தை காப்பியடித்த சூரியன் பட 18 வயது பாடல்.. ஏன் அப்படி செஞ்சாங்க தெரியுமா?

தமிழ் சினிமாவில் இரண்டாம் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருந்த சரத்குமாரை ஹீரோவாக்கி சூப்பர்ஹிட் வெற்றியைக் கொடுத்த படம் தான் சூரியன். 1992-ல் வெளியான இப்படத்தினை பவித்ரன் இயக்கியிருந்தார். தேவா இசையமைத்திருந்தார். சூரியன் படம் என்றதுமே ஞாபகத்திற்கு வருவது இரண்டு விஷயங்கள்தான். ஒன்று கவுண்டமணியின் காமெடி. மற்றொன்று 18 வயது பாடல்

தேவாவின் இசையில் காமெடிக்கு தனியாக ஹிட் ஆன இசை என்றால் அது கவுண்டமணிக்குப் போட்ட இசையாகத்தான் இருக்க முடியும். கவுண்டமணியை பழங்குடியினர் தூக்கிக் கொண்டு வரும்போது வரும் இசையானது ஒரு புதுவித புத்துணர்ச்சியைக் கொடுக்கும். உட்கார்ந்து யோசிப்பாங்களோ என்று தோன்றும் அளவிற்கு இந்த இசையானது தனித்துவம் பெற்றதாக இருக்கும். இந்த இசையைக் கேட்டாலே ஸ்டார்ட் த மியூசிக்.. ஸ்டாப் த மியூசிக்.. என்று கவுண்டமணி சொல்லும் காமெடி தானாக நினைவுக்கு வரும்.

அதேபோல்தான் 18 வயது பாடலும். கந்த சஷ்டி கவசம் பாடிய சூலமங்கலம் சகோதரிகள் போன்று 18 வயது பாடலைப் பாடியிருப்பர். இந்தப் பாடல் வெளியான தருணத்தில் எதிர்மறை விமர்சனங்கள் பல எழுந்தன. ஆனால் ஏன் கந்த சஷ்டி கவசம் போன்று காப்பியடிக்கப்பட்டது என தேவா பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

தல தீபாவளி.. தல போல வருமா பாட்டு இப்படித்தான் உருவாச்சா? சீக்ரெட் உடைத்த இயக்குநர் சரண்

படத்தில் காட்சிப்படி சரத்குமார் ரோஜாவைத் திருமணம் முடித்து ஓர் காட்டுப்பகுதியில் ஒரு குடிசையில் தங்கியிருப்பார்கள். அன்று அவர்களுக்கு சாந்தி முகூர்த்தம். ஆனால் சரத்குமாரோ அந்த தருணத்தில் வீட்டின் வாசற்படியில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் கேட்டுக் கொண்டிருப்பார். இதனைக் கண்ட ரோஜா அவரை வீட்டிற்குள் நான் பாடுகிறேன் நீங்கள் கேளுங்கள் என அமைந்திருப்பதாய் இருந்தது. ஆனால் படத்தின் மொத்த ஷுட்டிங் முடித்த பிறகு நீளம் கருதி சில காட்சிகள் வெட்டப்பட்டன. அப்படி வெட்டப்பட்டதில் கத்தரிப்பான காட்சிதான் இந்த கந்த சஷ்டி கவசம் காட்சி. இந்தப் பாடலை எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர் பாடியிருப்பர்.

ஆனால் படம் வெளிவந்த பிறகு அந்தக்காட்சி இல்லாமல் பாடல் மட்டும் இடம்பெற்றதால் அப்போது எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது. மேலும் விஷால் நடித்த தாமிரபரணி படத்தில் எல்.ஆல்.ஈஸ்வரியின் அம்மன் பாடலான கற்பூர நாயகியே கனகவள்ளி பாடலானது கருப்பான கையால என்னைப் புடிச்சான் என்று மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...