ராகவ் என்று அழைக்கப்படும் வெங்கடராகவன் ரங்கநாதன் சின்னத்திரை தொலைக்காட்சியில் தோன்றி பின்னர் வெள்ளித்திரைக்கு சென்றவர். இவர் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் துணை வேடங்களிலும் நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்பவர் ராகவ்.
சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராகவும், தொடர்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட ராகவ், விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ‘ஜோடி நம்பர் ஒன் சீசன் 1’ இல் தனது மனைவி ப்ரீத்தி உடன் இணைந்து கலந்துக் கொண்டு முதல் ரன்னர் அப் ஆக வெற்றிப் பெற்றவர்.
அதே போல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான பிரபல நடன போட்டி ‘மானாட மயிலாட’ ஷோவிலும் கலந்துக் கொண்டு முதல் ரன்னர் அப் ஆக வென்றார் ராகவ்- ப்ரீத்தி தம்பதியினர். இதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் ராகவ். நடனம் மட்டுமல்லாது இசையமைப்பிலும் ஆர்வம் கொண்டவர் ராகவ்.
‘ஜெர்ரி’, ‘வட்டாரம்’, ‘சத்தம் போடாதே’, ‘சிலம்பாட்டம்’, ‘வேலாயுதம்’, ‘நான் ராஜாவாக போகிறேன்’, ‘கல்யாண சமையல் சாதம்’, போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராகவ். ‘நஞ்சுபுரம்’ என்ற படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமானார். இது தவிர பல்வேறு சின்னத்திரை தொடர்களில் தோன்றியுள்ளார் ராகவ்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ராகவ் தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், நஞ்சுபுறம் படத்தில் நான் நாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் அந்தப் படத்திற்கு நான் தான் மியூசிக் கம்போஸ் பண்ணினேன். நான் கம்போஸ் பண்ணின ‘ஊருல எனக்கொரு மேடை’ பாடல் கூட பிரபலமானது. ஆனால் அந்தப் பாடலை நான் தான் கம்போஸ் பண்ணினேன் என்று நிறைய பேருக்கு தெரியாது என்று கூறியுள்ளார் ராகவ்.