நான் நடிக்க ஆரம்பித்த போது எனக்கு நடிக்க தெரியலனு விமர்சிச்சாங்க… இந்த டைரக்டர் கிட்ட போய் நடிச்ச அப்புறம் தான் எந்த கதாபாத்திரத்தில் எப்படி நடிக்கணும்னு கத்துக்கிட்டேன்…. ஜி. வி. பிரகாஷ் பகிர்வு…

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானின் மூத்த சகோதரியான ஏ. ஆர். ரெய்ஹானா- ஜி. வெங்கடேஷ் ஆகியோரின் மகன் தான் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்குமார். தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகராக பணிபுரிபவர்.

ஆரம்பத்தில் தனது மாமா ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த படங்களில் பிண்ணனியில் பாடகராக பணிபுரிந்தார். 2006 ஆம் ஆண்டு ‘வெயில்’ திரைப்படம் வாயிலாக இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது. இப்படத்தில் வரும் ‘வெயிலோடு விளையாடி’ பாடல் இன்றளவும் 90ஸ் கிட்ஸின் விருப்பமான பாடலாக இருக்கிறது.

2010 ஆம் ஆண்டு ‘மதராசபட்டினம்’ திரைப்படத்தில் இசையமைத்ததின் மூலம் பிரபலமானார் ஜி. வி. பிரகாஷ். தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜி. வி. பிரகாஷ். இசையமைப்பது மட்டுமல்லாமல் பாடல்களை பாடி புகழடைந்தவர் ஜி. வி. பிரகாஷ்.

2015 ஆம் ஆண்டு ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலமாக நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜி. வி. பிரகாஷ். பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘நாச்சியார்’, ‘பென்சில்’, ‘பேச்சிலர்’ ‘ஜெயில்’ போன்ற திரைப்படங்களில் நடித்து தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களைப் பெற்றவர்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ஜி. வி. பிரகாஷ் நடிகனாக தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் எனக்கு நடிக்க வரவில்லை என்று விமர்சித்தார்கள். அப்போது தான் பாலா சார் என்னை கூப்பிட்டு நாச்சியார் படத்தில் நடிக்க வைத்தார். எந்த கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை அவரிடம் தான் நான் கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் ஜி. வி. பிரகாஷ்.