நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ், மலையாளம், கன்னட சினிமாக்களில் நடித்துவரும் தென்னிந்திய நடிகையாகும். இவர் தமிழ் சினிமாவின் மூலமே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.
இவர் 2013 ஆம் ஆண்டு ஆப்பிள் பெண்ணே என்ற படத்தின்மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் தீயா வேலை செய்யணும் குமாரு படத்திலும் துணை நடிகையாக நடித்து இருப்பார்.
அதன்பின்னர் கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் பிசியாக நடித்துவந்த இவர் தமிழில் மீண்டும் தமிழ் படம் 2, வீரா, நான் சிரித்தால் போன்ற படங்களின் பிரபலமானார்.
தற்போது ஊரடங்கினால் வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் இவர், ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் லைவில் உரையாடி வருகிறார்.
அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு சலிக்காமல் தொடர்ந்து பதில் அளித்துவந்த அவர், தன் பள்ளி, கல்லூரி வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்க அவர் கூறிய பதிலாவது, “நான் தீவிரமான விஜய் ரசிகை, சிறுவயது முதலே எனக்கு விஜயைப் பிடிக்கும். நான் அவரது ஒவ்வொரு படங்களையும் தவறாமல் பார்த்துவிடுவேன். எனக்கு விஜயுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை” என்று கூறியுள்ளார்.