உலகநாயகன் கமல்ஹாசன் பல படங்கள் ஹியூமர் கலந்த காமெடியில் அட்டகாசமாக இருக்கும். தமிழ்த்திரை உலகில் எத்தனையோ ஹீரோக்கள் இருந்தாலும் கமல் அளவுக்கு டைமிங்காகக் காமெடி அடிக்க முடியாது. இதற்குப் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், பம்மல் கே.சம்பந்தம் அதுக்கு என்ன காரணம் என்பதை இங்கு பார்ப்போம்.
கிரேசிமோகன் – கமல் கூட்டணி படங்கள் என்றால் காமெடி பட்டையைக் கிளப்பும். காமெடி குறித்து கிரேசிமோகன் இப்படி சொல்கிறார். பொய்யை சொல்லி அதை ஹீரோ எப்படி சமாளிக்கிறான் என்பதில் தான் ஹியூமரே உள்ளது. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். அதை மாட்டிக்காம சொல்லணும். இந்தப் படங்களில் எல்லாம் பொய் சொல்றது தான் அடித்தளம். அதற்கு உதாரணம் தான் அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன். சமீபத்தில் யோகா கிளாஸ்சுக்குப் போனேன்.
தேசிக வாத்தியார் இருந்தார். உனக்குத் தெரிஞ்ச ஆசனம் எதுன்னு கேட்டாரு. எனக்கு பிடிச்ச ஆசனம் கமல்ஹாசனம். கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதுவது, இயக்கம் என சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை ஆசனங்களையும் போடுவது யாருன்னா அது சினிமாவின் மர்மயோகி கமல் தான். அவரை வைத்துத் தான் நான் அப்படி சொன்னேன் என்றேன். எங்களுக்கு மிகப்பெரிய விசிட்டிங் கார்டு கமல்ஹாசன் தான்.
கமலிடம் கிரேசி மோகன் எவ்வளவோ ஹீரோ இருக்காங்க… ஆனா உங்களுக்கு மட்டும் எப்படி அந்த ஹியூமர் கலந்த காமெடி நல்லா வருதுன்னு கேட்கிறார். அதற்கு கமல் இயல்பாக பதில் சொல்கிறார் பாருங்க.
எங்க அப்பா வந்து எதைக் கொடுத்தாலும் நல்லா சாப்பிடுவாரு. வாழைப்பழத்தைக் கொண்டு வந்து கட்சிக்காரங்க வச்சிட்டுப் போயிடுவாங்க. இவரு பைல் பார்க்குற மாதிரி ஒவ்வொரு பழமா பிச்சி சாப்பிட்டுக்கிட்டே இருப்பாரு.
அந்த தாரோட அளவு குறைஞ்சிக்கிட்டே வரும். அதுமட்டும் இல்லாம, இந்தப் பழத்தை சாப்பிட்டுட்டு அதோட தோலை எடுத்து வாசல்ல நிக்கிற கன்னுக்குட்டிக்கு எல்லாம் போட்டுக்கிட்டு இருப்பாரு. எங்க அம்மா பாத்துக்கிட்டே இருப்பாங்க. இவ்ளோ பழம் சாப்பிடக்கூடாதே.
அவருக்கிட்ட இதை எப்படி சொல்றதுன்னே தெரியல. உடனே எங்க அண்ணனை விட்டு சொல்லச் சொன்னாங்க. அப்பா போதும். கன்னுக்குட்டி தோலை ரொம்ப சாப்பிட்டுட்டு. உடம்புக்கு ஆகாதுன்னு சொல்வாரு. அப்படித் தான் எங்க வீட்டுல ஏதாவது ஒண்ணு டெய்லி நடந்துக்கிட்டே இருக்கும். அங்க இருந்து வந்தது தான் இந்த காமெடி எல்லாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.