ராஷி கன்னா இந்திப் படங்களில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய நடிகையாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார்.
இவர் இந்தியில் மெட்ராஸ் கபே என்னும் திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார், துணைக் கதாபாத்திரமாக அறிமுகமான இவருக்கு, தெலுங்கு சினிமா சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.
தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு போன்ற படங்களின் மூலம் பிரபலமானார்.
ராஷி கன்னா தற்போது ஹரியின் அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கொரோனாவால் சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் ராஷி கன்னா ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ட்விட்டரில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் உரையாடிவரும் ராஷி கண்ணா, ரசிகரின் கேள்விக்குப் பதில் கூறியுள்ளார். அப்போது ரசிகர், “உங்களுடைய பேவரைட் தமிழ் நடிகர் யார்” எனக் கேட்க, அதற்கு ராஷி கன்னா, “தளபதி விஜய் சார்” என்று பதில் கூறியுள்ளார்.