ரெண்டே படம்தான் ஆனா டாப் டைரக்டர்!! ஹேப்பி பர்த்டே தியாகராஜன் குமாரராஜா

By Nithila

Published:

பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது பஸ் ஓட்டுனரின் திறமையை கண்டு தானும் பஸ் டிரைவராக வேண்டுமென்று ஆசை பட்டிருக்கிறார். பின் கல்லூரி படிப்பை பாதியில் விட்டு சினிமாவில் சேர வேண்டுமென்று சுற்றியிருக்கிறார். விளம்பர படங்கள் மற்றும் போட்டோகிராபராக பணிபுரிந்திருக்கிறார்.

முதல் சினிமா வாய்ப்பு புஷ்கர்-காயத்ரி இயக்குனராக அறிமுகமான படம் ஓரம்போ. அந்த படத்தில் வசனங்கள் எழுத சான்ஸ் கிடைத்திருக்கிறது. அதனை நல்ல முறையில் பயன்படுத்தி இருப்பார். புஷ்கர்-காயத்ரியின் இரண்டாவது படமான ’வா’ படத்தில் பாடலாசிரியராக பணியாற்றி இருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் எஸ்.பி.பி சரணின் நட்பு கிடைத்திருக்கிறது. அவரும் தியாகராஜனின் முதல் படமான ஆரண்ய காண்டத்தை தயாரிக்க சம்மதித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் மாறுபட்ட சினிமாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமையை பெற்றார் தியாகராஜன்.

ஆனால், இந்த படம் எளிதாக ரீலிஸாகவில்லை. அதற்கு காரணம் படத்தில் இருந்த வன்முறைகளும், அவதூறான சில காட்சிகளும் தான்.அதை காரணமாக கூறி படத்தில் 52 இடத்தில் சென்சார் கட் செய்ய சென்சார் போர்ட் வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் அப்படி கட் செய்து படத்தை வெளியிடக்கூடாது இயல்பான விஷயங்கள் இப்படிதான் இருக்கும். அதை அப்படியே காட்டுவதில்தான் இயக்குனரின் படைப்புத்திறன் இருக்கிறது என்பதில் இயக்குனர் தெளிவாக இருந்திருக்கிறார்.

அவருக்கு உறுதுணையாக தயாரிப்பாளரும் இருக்க, இருவரும் டெல்லியில் இருக்கும் சென்சார் போர்டை அணுக அவர்கள் ஆரண்ய காண்டத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்கள். படம் ரீலிஸாகி பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருதினை தியாகராஜன் குமாராஜா பெற்றார். கவுதம் மேனனின் என்னை அறிந்தால், படத்தில் கதை ஆய்வில் பங்களித்திருக்கிறார்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் 3 நபர்களின் வாழ்க்கையை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். சூப்பர் டீலக்ஸ் படத்தையும் அதன் கதாபாத்திரங்களையும் கொண்டாடதவர்களே இல்லை. சமகாலத்தில் தியாகராஜன் குமாராஜா உடன் பயணிக்கும் இயக்குனர்களே தியாகராஜன் குமாராஜாவின் படைப்புகளை வியந்து பாராட்டுகிறார்கள். தொடர்ந்து இது போன்ற மாறுபட்ட படங்களை தர வேண்டுமென்று விரும்புகின்றனர். அப்படிப்பட்ட அனைவரது ஃபேவரிட் இயக்குனரான தியாகராஜன் குமாரராஜாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.