ஜி.வி.பிரகாஷின் 25வது படத்தில் மீண்டும் கூட்டணியில் பேச்சுலர் டீம்..!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தன்னுடைய 25-வது படத்தை தானே தயாரித்து நடிக்க போவதாக அறிவுப்புகள் வெளியாகி உள்ளன.

ஜி.வி.பிரகாஷ்ஆரம்பத்தில் மியூசிக் டைரக்டராக தனது திரைப் பணியைத் தொடங்கினார்.
முதன்முதலில், 2006ம் ஆண்டு ‘வெயில்’ படத்திற்கு இசையமைத்தார். அதன்பின் வந்த ‘ஓரம்போ’, ‘கீரிடம்’ போன்ற படங்களின் பாடல்கள் அனைவருக்கும் பிடித்துப் போனது. அவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்த படம் ‘பொல்லாதவன்’. தனுஷ், திவ்யா ஸ்பாந்தனா நடித்து வெற்றிமாறன் இயக்கிய அந்த படம் பெரிய வெற்றியை அடைந்தது.

டாடா படத்தில் ஹீரோவா நடிக்க வேண்டியவரா பிக்பாஸ் பிரதீப்?

2009ல் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான ‘அங்காடித் தெரு’ திரைபடத்தில் இடம்பெற்ற ‘உன்பேரை சொல்லும் போதே’ என்ற பாடல் காதலர்கள் கொண்டாடிய பாடல் ஆகும். அங்காடித் தெருவின் பின்னணி இசை மற்றும் பாடல் இரண்டுமே அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஒரு சில இயக்குனர்கள் தனக்கு ஆதர்சனமான மியூசிக் டைரக்டருடன் பணிபுரிவதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இருந்து செல்வராகவனுக்கும், பொல்லாதவனில் இருந்து வெற்றிமாறனுக்கும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படங்களில் ஒன்று ‘மார்க் ஆண்டனி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடித்திருந்தனர். அந்த படத்திற்கும் இசை ஜிவி பிரகாஷ் குமார் தான். பின்னணி இசை முக்கியமான அந்தப் படத்திற்கு பொருத்தமான இசையை வழங்கி இருப்பார்.

காரின் முன் விழுந்து சினிமா சான்ஸ் கேட்ட எஸ்.ஜே சூர்யா!

இசையோடு நின்றுவிடாமல் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இருந்துள்ளது. இயக்குனர்கள் பலரும் ஜி.வி பிரகாஷ் பக்கத்து வீட்டு பையன் போல தோற்றமளிப்பதால் தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க முயற்சித்துள்ளனர். இருப்பினும் அவர் சரியான பட வாய்ப்பிற்காக காத்திருந்தார். தலைவா மற்றும் குசேலனில் ஒரு சீனில் மட்டும் வந்து விட்டு போவார்.

பின் 2015ல் சாம் ஆண்டன் இயக்கிய ‘டார்லிங்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். நிக்கி கல்ராணி, கருணாஸ், பாலா சரவணன் ஆகியோர் நடித்திருப்பார்கள். நகைச்சுவை கலந்த பேய் படம் என்பதால், பலரும் ரசித்து பார்த்த படமாகும். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஜி.வி பிரகாஷ். கதிர் நடித்த ‘மதயானை கூட்டம்’ படத்தினை தயாரித்தார்.

லியோ இந்த ஹிட் படத்தின் தழுவலா? கசிந்த தகவல்!

அந்த படத்திற்கு பின் தற்போது தன்னுடைய 25வது படத்தினை தயாரிக்க போகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2021ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்ய பாரதியே இந்த படத்திலும் நடிக்க போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘பேச்சுலர்’ படத்தில் ஹிட் அடித்த இந்த ஜோடி மீண்டும் வெற்றிக் கூட்டணியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.