லியோ இந்த ஹிட் படத்தின் தழுவலா? கசிந்த தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியின் அடுத்தப்படம் என்ற அறிவிப்பு வெளியானதுமே, அதற்கான வரவேற்பும், எதிர்பார்ப்பும் தொடங்கி விட்டது. ஒவ்வொரு முறையும் படத்தை பற்றிய செய்திகள் வரும்போது, படம் இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று மக்கள் கருத்துக்களைக் தெரிவித்து வருகின்றனர்.

படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், அதைக் கொண்டாடி வருகிறார்கள். டிரெய்லரை டிகோட் செய்து விளக்கி வரும் பட ஆர்வலர்கள், 1997ல் வெளிவந்த ‘ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்’ எனும் கிராபிக் நாவலின் தழுவலைப்போல உள்ளது என்று கூறிவருகின்றனர். ஹாலிவுட்டில், அந்த நாவலை தழுவி, அதேப் பெயரில் 2005ல் படமாக வெளியாக மாஸ் ஹிட் அடித்துள்ளது.

ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ் என்ன கதை?

காஃபி ஷாப் ஒன்றை நடத்தி வரும் ஹீரோ அங்கு தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறான். காஃபி ஷாப்பை தாக்கி கொள்ளையடிக்க வரும் வில்லன்களிடம் இருந்து அங்கிருக்கும் மக்களை காப்பாற்றுகிறான். இதனால், மீடியாவின் வெளிச்சமும், மக்களும் அவனை ஹீரோவாக கொண்டாட ஆரம்பிக்கின்றனர். அதனால், ஹீரோவின் முன்னாள் எதிரிகளுக்கு அவன் இருக்கும் இடம் தெரிந்து துரத்த ஆரம்பிக்கின்றனர்.

ஹீரோவின் ஃபிளாஷ் பேக் ஸ்டோரி என்ன, திரும்பி வந்து வில்லன்களை எப்படி சமாளிக்கிறான் என்பதுவே ‘ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்’-ன் கதை. படத்தின் டிரெய்லரை பார்த்ததும், ஹெய்னாவிடம் இருந்து ஊரை காப்பாற்றும் ஹீரோ, அவனை கொண்டாடும் மீடியா இதனால் மீண்டும் விரட்டும் முன்னாள் எதிரிகள் என ‘ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்’ உடன் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. ஹாலிவுட் வெற்றிக் கதையும், லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸூம் சேர்ந்து மேஜிக் செய்யும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

அக்டோபர் 5 அன்று வெளியான லியோவின் ட்ரெய்லர், 24 மணிநேரத்தில் 3 கோடி பார்வையாளர்களையும், 9 லட்சம் லைக்குகளையும் பெற்று, ஜெயிலரின் ட்ரெய்லர் சாதனையை முறியடித்துள்ளது. ‘லியோ’வின் ட்ரெய்லருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, படத்திற்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதி செய்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...