விஜய்க்கு ஜோடியாக 2 படங்கள் நடித்தும் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வரும் கௌசல்யாவின் மறுபக்கம்!

Published:

தமிழ் சினிமாவின் 90களில் சிரித்த முகத்துடன் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை கௌசல்யா. முரளி,விஜய், கார்த்திக், பிரபு தேவா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். குறிப்பாக இவர் விஜய்யுடன் நேருக்கு நேர் என்னும் படத்தில் அகிலா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அந்த படத்தில் அகிலா அகிலா என ஒரு பாடலும் இடம்பெற்றிருக்கும். அடுத்தாக உன்னுடன் என்னும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.

நடிகை கௌசல்யா இது வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் வாழ்ந்து வருகிறார். கௌசல்யா பற்றி பலருக்கும் தெரியாத அவரின் மற்றொரு பக்கம் பற்றி தான் பார்க்க போகிறோம்.

கௌசல்யா டிசம்பர் 30 1979 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கவிதா சிவசங்கர்.கௌசல்யா 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படங்களில் பாலச்சந்திரன் மேனன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்த ஆண்டு அவர் தனது முதல் தமிழ் படம் காலமெல்லாம் காதல் வாழ்க திரைப்படத்தில் நடித்தார்.

பல வெற்றிகரமான தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பூவேலி திரைப்படத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றுள்ளார். முன்னணி கதாபாத்திரங்களில் தமிழ் மற்றும் மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எப்போதுமே சிரித்த முகமாக இருக்கும் நடிகை கௌசல்யா, அதே அழகுடன் அப்படியே இருக்கிறார்.

அவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் முதல் திரைப்படத்தில் இவர் நந்தினி என்ற கேரக்டரில் நடித்ததால் இவரை நந்தினி என்றுதான் மலையாள ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். இவரின் முதல் படம் மலையாளமாக இருந்தாலும் இவரை வளர்த்து விட்டது தமிழ் சினிமா தான். இவர் நடிகர் முரளி உடன் 1997இல் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் கௌசல்யா என்ற பெயரில் அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து கவிதா என்கிற தன்னுடைய பெயரை கௌசல்யா என்று மாற்றிக்கொண்டார்.

முதல் திரைப்படமே இவர் எதிர்பார்க்காத அளவில் இவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்ததாக இவர் விஜயுடன் கதாநாயகியாக நடித்தார். ஆனால் திருமலை படத்தில் விஜய்க்கு அண்ணியாகவும், சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்கா கேரக்டரில் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்து வந்த கௌசல்யா தற்போது கெஸ்ட் ரோலில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் 43 வயதை எட்டிய பின்பும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் வாழ்ந்து வருகிறார்.

ஹீரோக்கள் வாய் பேச முடியாமல் நடித்த படங்களின் லிஸ்ட் இதோ!

இது குறித்து இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் திருமணம் செய்து கொண்டு கணவன் குழந்தை எனக் குறுகிய வட்டத்திற்குள் வாழ நினைக்கவில்லை என்றும் தற்போது சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் இருப்பதாக துணிச்சலுடன் கூறியுள்ளார். 1996ல் சினிமா இண்டஸ்ட்ரிக் வந்து 2010 வரைக்கும் டாப் லெவலில் இருந்தார். ஆனால் அடுத்த சில ஆண்டுகள் சினிமா உலகை விட்டு இவர் சில நாட்கள் விலகியே இருந்தார்.

அதற்குப் பிறகு பூஜை திரைப்படத்தில் விஷாலுக்கு சித்தியாக இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...