ஒரே பாடலுக்காகவே திரும்ப திரும்ப தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்.. படத்தில் மூன்று முறை இடம்பெற்று வாகை சூடிய ஓ போடு..

By John A

Published:

ஒரு படம் சரியாக கதைக் களம் இல்லையென்றால் வந்த வேகத்தில் மீண்டும் பெட்டிக்குள் சுருண்டு விடும். பல புகழ்பெற்ற ஸ்டார் நடிகர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரங்களில் சரியான கதைக்களங்கள் இல்லாவிடினும் இசையமைப்பாளர்கள் தங்களது முழு திறமையையும் காட்டி அந்தப் படத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து வெற்றிப் படமாக்கி விடுவர்.

ஆனால் திரையில் ஒரே ஒரு பாடலுக்காக ரசிகர்கள் மீண்டும் மீண்டும் வந்து ரசித்து விட்டு அந்தப் படத்தினை மாபெரும் வெற்றிப் படமாக்கினார்கள் என்றால் அது ஜெமினி படமாகத்தான் இருக்க முடியும்.

சீயான் விக்ரம் சேது, காசி படத்திற்குப் பின் முற்றிலும் மாறுபட்ட கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்து அவரை ஆக்சன் ஹீரோவாக மாற்றிய படமென்றால் அது ஜெமினி படமாகத்தான் இருக்கும். ஏவிஎம் தயாரிப்பில், சரணண் இயக்கத்தில் கடந்த 2002-ல் வெளிவந்த ஜெமினி எதிர்பார்த்ததையும் தாண்டி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் படத்தில் பழைய படங்களைப் போல 8 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அத்தனை பாடல்களும் ஹிட்டாகின. அதிலும் குறிப்பாக ஓ.. போடு பாடல் படத்தில் மூன்று முறை இடம்பெற்றிருக்கும். முதன் முதலில் இந்தப் பாடலைப் பதிவு செய்த இசையமைப்பாளர் பரத்வாஜ் அனுராதா ஸ்ரீராம் குரலைப் பயன்படுத்தி இருப்பார்.

இந்தப் பாடலைக் கேட்ட ஏ.வி.எம்.சரவணன் பாடல் நன்றாக இருக்கிறது. எனவே மீண்டும் ஒருமுறை எஸ்.பி.பி. குரலில் இன்னொரு முறை பதிவு செய்யுங்கள் இருமுறை படத்தல் பயன்படுத்தலாம் என்று கூற, பரத்வாஜ் பின்னர் எஸ்.பி.பி. குரலில் பதிவு செய்தார்.

முதல்ல 1000, அடுத்து 6,000 ஆனா இப்போ.. மளமளவென எகிறிய கவின் சம்பளம்.. வாயடைத்துப் போன சக நடிகர்கள்..

உடனே விக்ரம், பரத்வாஜிடம் சார் நானும் ஒருமுறை பாடுகிறேன் என்று பாட மொத்தமாக இந்தப் பாடல் 3 முறை வந்திருக்கிறது. இதில் விக்ரம் பாடுவது படத்தின் இறுதியில் வரும். இந்தப் பாடல் வெளியான போது தமிழகமே ஆட்டம் போட்டது.

தியேட்டர்களில் வண்ண வண்ண விளக்குகளம், விசில் சப்தமும் பறந்தது. மேலும் ஆண், பெண் என வயது வித்யாசம் பார்க்காமல் துள்ளிக் குதித்தனர். மிகச் சிறந்த வைப் ஏற்றும் பாடலாக ஓ..போடு பாடல் அப்போது தமிழகத்தையே ஆட்டிப் படைத்தது.

இந்தப் பாடலுக்கான ஆடியோ உரிமை பெற்ற நிறுவனம் பல கோடி லாபம் பார்த்தது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு இந்த பாடலின் தாக்கம் குறையாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களால் மெலடி கிங் என்று அழைக்கப்படும் பரத்வாஜ் ஒரே ஒரு குத்துப்பாடல் போட்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே அப்போது ஆட வைத்தார்.

மேலும் இதன்பின் ஷாம் நடிப்பில் ஏ.வி.எம் தயாரிப்பில் வெளியான அன்பே அன்பே படத்தில் ரம்யா கிருஷ்ணன் குத்தாட்டம் போடும் “நான் வாஸ்து சாஸ்திரம்..” பாடலும் குத்துப் பாடலாக அமைந்து ஹிட் ஆனது.