முதல்ல 1000, அடுத்து 6,000 ஆனா இப்போ.. மளமளவென எகிறிய கவின் சம்பளம்.. வாயடைத்துப் போன சக நடிகர்கள்..

தமிழ் சினிமாவின் அடுத்த ஸ்டார் வேல்யூ நடிகராக வளர்ந்து வருகிறார் கவின். கடந்த வருடம் டாடா படம் கொடுத்த வெற்றி அவரின் சினிமா கேரியரை டாப் கியரில் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இப்போது மணிகண்டன், ரியோ, பிரதீப் ரங்கநாதன் போன்ற மூன்றாம்கட்ட ஹீரோக்களுக்கு போட்டியாக உருவெடுத்திருக்கிறார் கவின்.

எத்தனையோ பேரை சினிமா கனவினை நனவாக்கி விட்ட ஸ்டார் விஜய் தொலைக்காட்சி கனாகாணும் காலங்கள் கவினையும் விட்டு வைக்கவில்லை. கனாகாணும் காலங்கள் சீரியலில் ஆரம்பித்த இவரது சினிமா உலகம் இன்று ஸ்டார் ஆக ஸ்டார் படம் வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

அண்மையில் ஸ்டார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், நீங்கள் கோடிகளில் சம்பளம் கேட்பதாக தகவல்கள் வருகிறதே என்ற கேள்விக்கு கவின் நச் பதில் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், “நான் கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகமாகி நடிக்கும் போது ஒருநாளைக்கு 1000 ரூபாய் கொடுத்தாங்க.

பருத்திவீரன் சித்தப்புவாக முதலில் நடிக்கவிருந்த பிரபலம் இவரா? சரவணன் தேர்வானது இப்படித்தான்.

அதற்கு அடுத்ததாக சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடிக்கும் போது என்னுடைய ஒருநாள் ஷுட்டிங் சம்பளம் 6,000 ஆக இருந்தது. அதேபோல் நான் இப்போது கேட்டவுடன் யாரும் சம்பளத்தை அதிகமாகக் கொடுத்து விட மாட்டாங்க. நம்மளோட மார்க்கெட் பார்த்துத்தான் சம்பளத்தை உயர்த்தித் தருவாங்க” என்று கூறியுள்ளார்.

தற்போது கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் இதற்கு அடுத்ததாக நெல்சன் தயாரிப்பில் Bloody Beggar என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படி அடுத்தடுத்து முன்னனி இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் படங்களில் கவின் நடிக்க ஒப்பந்தமாகி வருவதால் இவரது சக நடிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும் கவின் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் சிவகார்த்திகேயன் பாணியில் கமர்ஷியல் வகையைச் சார்ந்ததாகவும் உள்ளதால் மளமளவென ஜெட் வேகத்தில் அவரது சினிமா பயணம் உயர்ந்து கொண்டிருக்கிறது. கவின் நடிப்பில் 4வதாக வந்துள்ள இப்படத்தில் அவர் கோடிகளில் சம்பளம் பெற்றார் என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...