விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 வது சீசனில் பங்கேற்றவர் நடிகர் கவின், இவர் பிக் பாஸ் 3 டைட்டிலை வெல்லவில்லை என்றாலும், ஆரம்பம் முதலே காதல் மன்னனாக இருந்து அதிக அளவிலான இளைஞர்களை ரசிகர்களாகக் கொண்டவர்.
சரவணன் மீனாட்சி தொடரில் இவருக்கு இருந்த ரசிகர்கள் மூலம் எளிதில் மக்கள் மனதில் இடம்பிடித்த அவர் ஷாக்சி, ஷெரின், அபிராமி, லாஸ்லியா என 4 பெண்களையும் காதலிப்பதாக கூறி வந்தார். ஆனால் ஷாக்சியுடன் காதல் வலையில் விழுந்த அவர், அவரை 2 வாரங்களுக்குள் கழட்டிவிட்டுவிட்டு, லாஸ்லியாவைக் காதலிப்பதாகக் கூறி வந்தார்.
கவி-லியா ஆர்மி என்று இவர்கள் காதலுக்கு ஒரு ஆர்மியே உள்ள நிலையில், வெளியே வந்தபின்னர் ஏதும் நடக்காததுபோல் கவின் படங்களிலும் நடிப்பதும், லாஸ்லியா படங்களில் நடிப்பதும் என்று இருந்து வருகின்றனர்.
விருது விழாக்களில் சந்தித்துக் கொண்டாலும் பட்டும் படாமலுமே பேசி வருகின்றனர். கவின் பேட்டி ஏதும் கொடுக்காமல் இருந்துவந்தாலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவினை வெளியிட்டு அவரது நண்பர் ஒருவரைப் பழிதீர்த்துள்ளார். அவர் வீடியோவுடன் பதிவிட்டுள்ளதாவது, “சில வருடத்திற்கு முன் அரசாங்க உத்தரவு இல்லாமல் நானே என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். அப்போது செய்த வேலை தான் இது.. நான் சும்மா இருந்தால் சும்மா இருக்கமாட்டேன் பழிவாங்குவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது அவரது நண்பர் ஒருவர் கவின் பேண்டை வைத்து ஃபேனைத் துடைக்க, அதற்குப் பழிவாங்கும் பொருட்டு தன் நண்பனின் வைத்து மொத்த வீட்டினையும் சுத்தம் செய்துள்ளார் பாருங்கள்.