2 வது திருமணத்தில் அமலாபாலுக்கு ஏற்பட்ட மனக் கசப்பு… அவரே வெளியிட்டுள்ள தகவல்!!

By Staff

Published:

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால்,  10 வருடங்கள் ஆன நிலையில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

தெய்வத் திருமகள், மைனா, அம்மா கணக்கு, பசங்க 2 என்பதுபோன்ற பல படங்களில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வந்தநிலையில், சினிமாவில் இருந்து விலகி  இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

5c686916493d03fdeddd2952055fe87d

2 ஆண்டுகளில் பிரிந்த இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது. அதன்பின்னர் மீண்டும் சினிமாக்களில் நடிக்கத் துவங்கிய அமலாபால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்தார். அதிலும் நிர்வாணமாக இவர் நடித்த ஆடை திரைப்படம் பெரிய அளவில் சர் ச்சையினை சந்தித்தது.

அதன்பின்னரும் இவர் விடாப்பிடியாய் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி, அதை வலைதளங்களில் பதிவிட்டும் வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் இவர் முன்னர் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின்போது இவர்கள் வெளியிட்ட முத்த புகைப்படத்தால் ரசிகர்கள் கூடுதல் கடுப்பாகினர். பவ்னிந்தர் சிங் இன்ஸ்டாகிராமில் திருமணம் ஆன புகைப்படங்களை பதிவிட்டநிலையில், திடீரென மீண்டும் அதனை நீக்கி விட்டார்.

அதன்பின்னர் பவ்னிந்தர் மீது கோபமடைந்த அமலா பால் அவரைப் பின் தொடர்வதையே நிறுத்தி விட்டார். தற்போது அமலாபால், “உனக்கு நீ மட்டும் தான் பெஸ்ட். ஹீரோ, ஹீரோயின், தோழி, சோல் மேட் எல்லாமே உனக்கு நீ மட்டும் தான். தனக்குத் தான் மட்டும் தான்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment