கவின் என் பேச்சைக் கேட்கல… புலம்பும் சாண்டி!!

பிக் பாஸ் முடியவுள்ளதால், போட்டியாளர்கள் பிக் பாஸுடன் பேசலாம் என்று கமல்ஹாசன் கூற, அதன்படி ஒவ்வொரு போட்டியாளரும் கன்பெஷன் ரூமுக்குள் சென்று பேசினர். முதல் ஆளாக சென்ற சாண்டி, இந்தவீட்டில் நாமினேசன் செய்வது கஷ்டமான…

பிக் பாஸ் முடியவுள்ளதால், போட்டியாளர்கள் பிக் பாஸுடன் பேசலாம் என்று கமல்ஹாசன் கூற, அதன்படி ஒவ்வொரு போட்டியாளரும் கன்பெஷன் ரூமுக்குள் சென்று பேசினர்.

முதல் ஆளாக சென்ற சாண்டி, இந்தவீட்டில் நாமினேசன் செய்வது கஷ்டமான ஒன்றாக இருந்தது, நேரடியாக ஒருவரைப் பற்றி பேசுவது வருத்தமளித்தது. இதுவரை வெளியில்கூட அப்படி பேசியது இல்லை என்றார்.

d779237bacb9abdb58fbe29c8ac4558c

அதைத்தவிட இந்த வீட்டில் எல்லாமே சந்தோஷம் என்றார், போகும் தருவாயை நினைத்தால் மனது வலிக்கிறது என்று உணர்வு பொங்கப் பேசினார். இந்த வீட்டில் மாற்றக் கூடிய சக்தி இருந்தால் எதனை மாற்றுவீர்கள்? என்று கேட்க, ஆரம்பத்தில் இருந்த கவினை அப்படியே வைத்திருப்பேன், நான் சொன்னதை அவன் கேக்கல, இல்லையேல் அவன் மகிழ்ச்சியாக பைனல்ஸ் வரை வந்திருப்பான் என்றார்.

இந்த வீட்டில் பிடித்த இடம் எது? என்ற கேள்விக்கு, பிக் பாஸ் வீட்டின் என்ட்ரி டோர்தான். எல்லோரையும் வரவேற்பதும் அது தான், ஆட்டம் காட்டினால், வெளியே அனுப்புவதும் அது தான்.

வந்தாரை வாழ வைக்கும் தெய்வம் என்று சொன்னார்.  மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு. நான் 3 நாமினேஷனில் இருந்துள்ளே, என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்த மக்களுக்கு நன்றி, அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள், ஃபன் பண்ணுங்கள் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன