உலக நாயகன் கமலஹாசனின் அடுத்தடுத்து தோல்வி படங்கள் மற்றும் அரசியல் வருகைக்கு மத்தியில் இனி சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லை என விமர்சனங்கள் வரத் தொடங்கிய நேரத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. உலக சினிமா ரசிகர்களை மீண்டும் கைவசப்படுத்திய கமலஹாசன் தற்பொழுது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து கல்கி திரைப்படம், ஹச் வினோத் இயக்கத்தில் 233 வது திரைப்படம், பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படம், பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படம், இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஒரு திரைப்படம் என அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளார்.
அந்த வகையில் கமலின் எவர்கிரீன் திரைப்படம் ஆன வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை யாரும் மறக்க முடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு பத்து கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மீண்டும் நடிகர் கமல் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி இணைய வாய்ப்புள்ளதாக தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மின்னலே திரைப்படத்தின் மூலம் தன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதைத் தொடர்ந்து காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் என பல காதல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னும் ஒரு இரு நாட்களில் வெளியாக உள்ளது. முன்னணி இயக்குனராக வலம் வந்த கௌதமேனன் தற்பொழுது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விஜயின் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
படங்கள் இயக்குவதை தொடர்ந்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் கௌதம் மேனன் துருவ நட்சத்திர திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது ஒரு பழைய படத்தை ரீமேக் செய்து அந்த படத்தில் கமலஹாசனை ஹீரோவாக நடிக்க வைப்பதில் கௌதம் மேனன் ஈடுபாடு காட்டி வருகிறார். 1985 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகையர் ராதா நடிப்பில் வெளியான மிகப் பெரிய ஹிட் திரைப்படம் தான் முதல் மரியாதை.
ரிலீசுக்கு முன்பே 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த விடாமுயற்சி திரைப்படம்!
நடிகர் திலகம் சிவாஜி நீண்ட இடைவேளைக்குப் பின் முதல் மரியாதை திரைப்படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்து தனது இயல்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்த திரைப்படம் சிவாஜிக்கு எதிர்பாராத வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாகும் அதில் சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் நடிகர் கமலஹாசன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என இயக்குனர் கௌதம் மேனன் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த படத்தில் கமல் நடிக்கும் பட்சத்தில் ராதா கதாபாத்திரத்தில் எந்த ஹீரோயின் நடிக்க உள்ளார் என்பது கேள்வியாக உள்ளது.
மேலும் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடி கமர்சியல் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் கமல் இது போன்ற காதல் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் இந்த காலத்திற்கு ஏற்றார் போல் இந்த கதையை மாற்றி இயக்க தயாராக இருந்தாலும் நடிகர் கமலஹாசனுக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இந்த படம் இயக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது.