ரிலீசுக்கு முன்பே 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த விடாமுயற்சி திரைப்படம்!

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தனது 62 ஆவது திரைப்படம் ஆன விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து வேறு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் லைக்கா தயாரிப்பின் உரிமையாளர் சுபாஷ்கரன் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் செப்டம்பர் மாதம் தொடங்கும் என ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதைத் தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் நான்காம் தேதி தொடங்கியது. ஐரோப்பிய நாடான அஜர்பைஜானில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தீபாவளி அன்று கூட விடுமுறை இல்லாமல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் நடிகை திரிஷா மற்றும் பிரியா பவானி சங்கர் கலந்து கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு முக்கிய வில்லனாக சஞ்சய் தத் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் மற்றொரு வில்லனாக நடிகர் ஆரவ் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான கழகத் தலைவன் படத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிப்பு மிக சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பிரபலமடைந்த ஆரவ் தற்பொழுது தல அஜித் அவர்களுடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆக்சன் கிங் அர்ஜுன் லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து மிகப்பெரிய ஹீரோவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறினார். நடிகர் அஜித் அவர்களின் 50 ஆவது திரைப்படமான மங்காத்தா திரைப்படத்திலும் ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இந்த கூட்டணி விடாமுயற்சி திரைப்படத்தில் இணைய உள்ளது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அஜர்பை ஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தற்போது துபாயில் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்து இரண்டு மூன்று செட்யூல்களில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு படக்குழு சென்னை திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதி கட்டப்பிடிப்புகள் அனைத்தும் சென்னையில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ப்ரீ பிசினஸ் தற்பொழுது அதிரடியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படத்தின் ஓ டி டி உரிமையை நெட் பிளஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் இந்த இரண்டு ரைட்ஸ்கள் மட்டுமே 100 முதல் 150 கோடிக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து நல்ல விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதை போல் விடாமுயற்சி திரைப்படமும் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...