கங்கை அமரனுக்கு வந்த ரஜினி பட வாய்ப்பு.. தட்டித் தூக்கிய ஆர்.சுந்தர்ராஜன்..

By John A

Published:

தமிழ் சினிமாவில் தனது அண்ணன் ஒருபக்கம் இசையில் கலக்கிக் கொண்டிருக்க இவரோ பாடல்கள், இயக்கம் என அசத்திக் கொண்டிருந்தார். மற்றும் ஒரு அண்ணன் படத் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தார். இப்படி சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வந்தவர்கள் பின்னாளில் சினிமா உலகத்தையே ஆண்டவர்கள்தான் இளையராஜா சகோதரர்கள். தனது இளைய சகோதரர் கங்கை அமரன் அண்ணன் இளையராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு இசை அமைப்பில் உதவி செய்திருக்கிறார்.

மேலும் இசையில் பல பாடல்களையும் இயற்றியிருக்கிறார். 16 வயதினிலே ‘செந்தூரப் பூவே..‘ கோவா படத்தில் இடம்பெற்ற முதல் “இதுவரை இல்லாத உறவிது.“ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதியும் உள்ளார் கங்கை அமரன். இயக்குநராக கோழி கூவுது, கரகாட்டக்காரன்  என பல ஹிட் படங்களையும் இயக்கியவர்.

இப்படி தமிழ் சினிமாவில் இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டராக விளங்கினார் கங்கை அமரன்.

இந்நிலையில் இவர்களது நிறுவனமான பாவலர் கிரியேஷன்ஸ் சார்பில்  இளையராஜா தனது அண்ணனான ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. அப்போது பல ஹிட் படங்களை இயக்கி புகழின் உச்சத்தில் இருந்த கங்கை அமரன் இந்தப் படத்தினை இயக்குவார் எதிர்பார்க்கப்பட்டது.

கண்ணதாசன் பேச்சைக் கேட்காத சாவித்ரி..சொந்தப் படம் எடுத்து கையைச் சுட்டுக் கொண்டது இப்படித்தான்…

ஆனால் அவரது கனவு நனவாகவில்லை. அப்போது ஆர். சுந்தர்ராஜன் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். மேலும் தனது அனைத்துப் படங்களிலும் இளையராஜாவின் இசையையே பயன்படுத்தி தனது படங்களை வெள்ளிவிழா லிஸ்ட்டில் சேர்த்தார். அப்போது இளையராஜாவும்-ஆர்.சுந்தரர்ராஜனும் மிகுந்த நட்புடன் இருந்தனர்.

இதனால் இளையராஜா ரஜினி நடிப்பில் உருவான அந்தப் படத்தினை இயக்கும் வாய்ப்பினை ஆர்.சுந்தர்ராஜனுக்கு வழங்கினார். மேலும் இந்தப் படத்தின் கதையில் முதலில் நாட்டம் கொள்ளாத ரஜினி பின் இளையராஜாவின் வற்புறுத்தலால் நடித்தார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். தைரியமாக நடித்துக் கொடுங்கள் என இளையராஜா வாக்குறுதி கொடுக்க பின் தனது இசையால் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து படத்தினை வெற்றி பெறச் செய்தார் இளையராஜா.

இதன் காரணமாக ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கங்கை அமரனுக்கு கைநழுவிப் போனது.