திருப்பதி லட்டு இன்று முதல் இலவசம்: பக்தர்கள் மகிழ்ச்சி

By Staff

Published:


68c336f55b3cdef1b63087e4cefe0e56

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த கோவிலில் கடந்த கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில், ஜனவரி 20 முதல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு பதில் ஒரு லட்டு மட்டும் இலவசமாக வழங்கபடும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இலவச லட்டை தவிர்த்து அதிக லட்டு வாங்க விரும்பும் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே உள்ள மையங்களில் 50 ரூபாய்க்கு ஒரு லடு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி லட்டுகள் விற்பனைக்காக 12 மையங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் 4 லட்சம் லட்டுகள் வரை விற்பனை செய்ய கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Comment