ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?

By Bala Siva

Published:

தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்து தீபாவளி தினத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது இன்று வரை தொடர்கதையாக இருந்து வருகிறது. தீபாவளி அன்று உச்ச நட்சத்திரங்கள் படங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகும் என்பதும் ரசிகர்களும் அவற்றை போட்டி போட்டுக்கொண்டு பார்ப்பார்கள் என்பதும் தெரிந்ததே.

ஆனால் கமல்ஹாசனின் நான்கு திரைப்படங்கள் ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆனது தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்த நடிகர்களும் செய்யாத சாதனையாக கருதப்படுகிறது.

படம் வெளியான மூன்றே நாளில் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்.. ‘வசந்த மாளிகை’ படத்தின் அறியாத தகவல்..!

sigappu rojakkal1

1978ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த நான்கு திரைப்படங்கள் வெளியாகியது. இவற்றில் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் உருவான ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்ற திரைப்படம் முதலாவது ஆக வெளியானது. இது 1978ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி வெளியானது.

தமிழில் முதல் முறையாக ஒரு திரில் கதை அம்சத்தை பாரதிராஜா கொடுத்திருப்பார். கடைசிவரை முன் சீட்டில் உட்கார்ந்து ரசிகர்கள் பார்க்கும் வகையில் இருக்கும் இந்த படம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

நெகட்டிவ் கேரக்டரில் கமல்ஹாசன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருப்பார். அவரிடம் மாட்டிக் கொண்டு அவரிடமிருந்து எப்படி தப்பிப்பது என்ற கேரக்டரில் ஸ்ரீதேவி அசத்தலாக நடித்திருப்பார்.

manitharil 1

இந்த நிலையில் 1978ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இன்னொரு திரைப்படம் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’. ஆர்.சி.சக்தி இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் உருவான இந்த படமும் சுமாரான வரவேற்பு பெற்றது.

இதனை அடுத்து 1978ஆம் ஆண்டு  அக்டோபர் 30-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அவள் அப்படித்தான்’. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா ஆகிய மூவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்த இந்த படத்தின் கதையே வித்தியாசமானது. ஆவண படங்களை எடுக்கும் கமல்ஹாசன், ரஜினியின் அலுவலகத்தில் பணிபுரியும் ஸ்ரீபிரியாவை சந்தித்து தனது ஆவணப்படத்தில் உதவியாக இருக்குமாறு கேட்டுக் கொள்வார். அவர் தயக்கத்துடன் சம்மதிக்கும் நிலையில் அவருடைய கேரக்டரை மெல்ல மெல்ல கமல்ஹாசன் அறிந்து வாழ்க்கை வெறுத்து போயிருக்கும் அவருக்கு நம்பிக்கையாக இருப்பார். ஒரு கட்டத்தில் ஸ்ரீப்ரியாவை திருமணம் செய்ய விரும்புவதாக கமல்ஹாசன் கூற ஆனால் அவர் தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்று மறுத்து விடுவார். இதனை அடுத்து தந்தை பார்த்த பெண்ணை கமல்ஹாசன் மணந்து கொள்ளும் போது கமல் மீது தனக்குள் காதலை உணரும் ஸ்ரீப்ரியா வருத்தமடைவார் என்பது போன்று படம் முடிக்கப்பட்டு இருக்கும்.

aval appadithan

இப்படி ஒரு படத்தில் நடித்ததை நான் பெருமையாக கருதுகிறேன் என கமல், ரஜினி ஆகிய இருவருமே அடிக்கடி பேட்டியில் கூறியிருப்பார்கள். இருவரது மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக அவள் அப்படித்தான் இருக்கிறது.

ரஜினி – கமல் இணைந்து நடித்த கடைசி படம்.. நினைத்தாலே இனிக்கும் ஒரு இசைக்கவிதை!

இந்த நிலையில் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி வெளியான கமல்ஹாசனின் இன்னொரு திரைப்படம் ‘தப்பு தாளங்கள்’. பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் சரிதா நடிப்பில் உருவான இந்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

aval appadithan1

அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் சிகப்பு ரோஜாக்கள், மனிதர்கள் இத்தனை நிறங்களா, அவள் அப்படித்தான் மற்றும் தப்புத்தாளங்கள் என நான்கு படங்கள் ஒரே தீபாவளியில் வெளியிடப்பட்டது. இது கமல்ஹாசன் செய்த சாதனையாக கருதப்படுகிறது. இவற்றில் இரண்டு படங்களில் கமலஹாசன், ஸ்ரீதேவி ஆகிய இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

30 வயதில் ரஜினிக்கு அம்மா.. ரஜினிக்கு அப்போது வயது 32.. கமலா காமேஷின் அறியப்படாத பக்கம்..!

ஒரு மாஸ் நடிகரின் ஒரு படம் தீபாவளிக்கு வருவதே அரிதாக இருக்கும் நிலையில் ஒரே தீபாவளியில் கமல்ஹாசனின் நான்கு படங்கள் வந்தது. இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.