மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, விஜய் நடித்து வரும் மாஸ்டர்’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ‘AWE’ என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்
முதல் பாகத்தில் இந்த படத்தில் நடித்த காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா, ஈஷா ரெபா, பிரியதர்ஷினி ஆகிய ஐந்து நடிகைகளும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா, ஈஷா ரெபா, பிரியதர்ஷினி ஆகிய ஐந்து கேரக்டர்களையும் இணைக்கும் புள்ளியாக விஜய் சேதுபதி கேரக்டர் இருக்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது