இந்த வார இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி வர உள்ளதால் அவர் 18 போட்டியாளர்களிடமும் பார்த்த விஷயத்தை பற்றி பேச போகிறது எப்படி இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவலாக தொற்றிக் கொண்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் மற்ற ஐந்து நாட்களை விட சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தொகுப்பாளர் வந்து போட்டியாளர்களிடம் பேசும் விஷயங்களை ரசிக்கத் தான் அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கும்.
அப்படி ஒரு சூழலில் முதல்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களமிறங்கியுள்ள விஜய் சேதுபதி முதல் வார இறுதியில் என்ன செய்யப் போகிறார் எப்படி போட்டியாளர்களை கையாள போகிறார், அவர்களின் விளையாட்டுத் திறனை எப்படி கேள்வி எழுப்பி விமர்சனம் செய்யப் போகிறார் என பழைய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி வார இறுதியில் விஜய் சேதுபதி வந்தபின் என்னவெல்லாம் நடக்கும் என ஒரு பக்கம் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் போட்டியாளராக உள்ளே இருக்கும் ரவீந்தர் தனது விளையாட்டை ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. சமீபத்தில் Real அல்லது Fake என நினைப்பவர்கள் யார் என்பது பற்றி ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் அபிப்பிராயம் கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு அனைவரது மத்தியிலும் ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் நிஜமாக இருக்கும் நபருக்கும் Real என்ற ஸ்டிக்கரையும், போலியாக வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு Fake என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி இருந்தனர். இதில் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் கூட பேட்மேன் ரவிந்தருக்கு ஃபேக் என்ற ஸ்டிக்கரை ஒட்டவில்லை.
ஆனால் ஆண்கள் அணியில் இருந்து அருண், தீபக் உள்ளிட்ட நான்கு பேர் ரவீந்தரை பிக் பாஸ் வீட்டில் போலியாக இருப்பதாக குறிப்பிட்டு Fake என்ற ஸ்டிக்கரை ஒட்டி இருந்தனர். இது பற்றி சவுந்தர்யா மற்றும் அர்னவ் ஆகியோரிடம் பேசும் ரவீந்தர், “அண்ணனுக்கு இப்படி ஆகிப்போச்சே, அண்ணனுக்கு இப்படி ஆகிப்போச்சுன்னு சொல்றீங்களே. அப்படின்னா எனக்கு ரெண்டு ரியல் ஸ்டிக்கர் கொடுத்திருக்கலாம்ல. நான் பார்த்த ஆகச் சிறந்த மனிதன் தீபக், ஆகச் சிறந்த மனிதன் சத்யானு அவங்களுக்கு ரியல் ஸ்டிக்கரை கொடுக்குறாங்க.
அப்போ நான் Fake-ஆ. என்னை பத்தி சுத்தி சுத்தி போய் பேசுனீங்க. இப்ப என்ன ஆச்சு” என குறிப்பிடும் ரவீந்தர், ஆண்கள் அணியில் சிலர் ஆட்டு மந்தைகளை போல இருப்பதாக பிக் பாஸ் சொன்னதை குறிப்பிட்டு பேசுகிறார். இதனால், அருண், தீபக், ஜெஃப்ரி, சத்யா உள்ளிட்டோர் க்ரூப்பாக இருப்பதை தான் ரவீந்தர் அப்படி சொல்கிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.