எழுச்சி இல்ல கவுச்சிதான் வரும்- ரஜினி மீது பாய்ந்த மன்சூர்

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக கலக்கியவர் மன்சூர் அலிகான். மிரட்டலான வில்லனாக நடித்த இவர் சில வருடங்களாக நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்ற…

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக கலக்கியவர் மன்சூர் அலிகான். மிரட்டலான வில்லனாக நடித்த இவர் சில வருடங்களாக நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார்.

2720e340100a502b400031060c6d3c61-1

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டி இட்டார் இவர்.

சேலம் எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பலபிரச்சினைகளுக்கு அரசை எதிர்த்து குரல் கொடுத்து சிறை சென்றவர் இவர்.

கடுமையான வார்த்தைகளால்தொடர்ந்து ஆட்சியாளர்களை வறுத்தெடுத்து வரும் இவர் ரஜினிகாந்தையும் அடிக்கடி வறுத்தெடுப்பார்.

கடந்த சில நாட்களாக சும்மா இருந்த இவர் திரும்பவும் ரஜினிகாந்த்தை டச் செய்துள்ளார். சமீபத்திய ரஜினியின் பேச்சுக்களை கேட்டு இவ்வாறு பேசியுள்ளார்.

எட்டு வழிச்சாலை போராட்டத்தின் போது என்ன செய்து கொண்டு இருந்திங்க அப்போ மக்கள் போராடுனாங்களே அது எழுச்சியா தெரியலையா, ஜல்லிக்கட்டு போராட்டத்துல அவ்வளவு பேர் சேர்ந்து போராடுனாங்களே அது எழுச்சியா தெரியலையா? தூத்துக்குடி போராட்டம் எழுச்சியா தெரியலையா? தற்போது சிஏஏ என் ஆர் சி என் பிஆர்க்கு எதிராக போராடுவது எழுச்சியா தெரியலையா என ரஜினியை கடுமையாக எதிர்த்துள்ளார்.

ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன் பேசிய போது மக்கள் எழுச்சி அடைந்தால் அரசியலுக்கு வருவேன் என ரஜினி பேசி இருந்தார். இவ்வளவு போராட்டமும் எழுச்சி இல்லாமல் கவுச்சியா என மன்சூர் அலிகான் கேட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன