இயக்குனர் பவித்ரன் ஒரு காலத்தில் வசந்த கால பறவை, சூரியன், ஐ லவ் இந்தியா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்.
பவித்ரன் இயக்கிய சூரியன் படத்தில் ஷங்கர்தா உதவி இயக்குனர். இப்போது ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் சில நாட்களுக்கு முன் விபத்து ஏற்பட்டது. கிரேன் அறுந்து விழுந்ததால் 3 பேர் பலியாகினர்
இந்த விபத்தால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்டோரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து ஒரு விழாவில் பேசிய இயக்குனர் பவித்ரன் , கமலும் ஷங்கரும் சேர்ந்து அப்பாவிகளை கொன்று விட்டது போல் மிக கடுமையாக கமலையும் ஷங்கரையும் சாடி இருந்தார். இது ஒரு கொலை என்பது போலவும் பேசி இருந்தார்.
ஐ லவ் இந்தியா படத்தில் இது போல ஒரு காட்சிக்கு பலூன் மேலே பறக்க வேண்டும் அதை படமெடுக்க வேண்டும் என்பதற்காக தானே பல ஆயிரம் அடிக்கு மேல் சென்று படம் பிடித்ததாக கூறியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர் ஒருவர் கீழ்க்கண்ட புகைப்படத்தில் இருக்கும் கமெண்ட் செய்திருக்கிறார்.அவர் ஒரு முன்னாள் கேமரா மேன் என்றும் 2012ல் இருந்து சினி பீல்டை விட்டு விலகி இருப்பது போல் கூறியுள்ளார்.
இது உண்மைதானா என தெரியவில்லை.