ஆங்கில புத்தாண்டு பிறக்க இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது எங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் காலம் கடந்தாலும் இன்னும் பல இடங்களில் குறிப்பிட்ட சில பாடல்களே தொடர்ந்து ஒலிபரப்பாகிறது. இதை தாண்டி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சில பாடல்கள் வந்திருந்தாலும் அவை மக்கள் மனதில் இன்னும் வலுவாக ஒட்டவில்லை.
எண்பதுகளில் வந்த பாடல்கள் தான் இன்னும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
இன்றும் ஹோட்டல்கள், தொலைக்காட்சிகள் அனைத்திலுமே இந்த பாட்டை புது வருஷம் பிறக்க சில மணி நேரத்திற்கு முன்பிருந்து கேட்கலாம் கிட்டத்தட்ட 37 வருடமாக இந்த பாட்டுதான் புத்தாண்டு கொண்டாட்டத்தின் கதாநாயகன்.
கமல் நடித்த சகல கலா வல்லவன் படத்தில் விஸ் யூ ஹேப்பி நியூ இயர் என ஆரம்பிக்கும் இந்த பாடல் பல வருடமாக ட்ரெண்டிங்கில் உள்ளது.
அதே போல் சிவாஜி கணேசன், பிரபு நடித்த சங்கிலி படத்தில் நல்லோர்கள் நம்மை காக்க நமக்காக நன்மை காக்க ஹேப்பி நியூ இயர் பாடல் புத்தாண்டி ட்ரெண்டிங்கில் உள்ளது.
சிவாஜி, பிரபு நடித்த திருப்பம் படத்தில் தங்க மகள் துள்ளி வந்தாள் புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஆரம்பிக்கும் பாடல் காலம் கடந்தும் மறக்க முடியாத பாடலாக உள்ளது.
அதே போல் பிரபு நடித்த வெற்றிக்கரங்கள் படத்தில் நள்ளிரவு மெல்ல மெல்ல பாடலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு இன்றும் வகிக்கிறது.