இன்றைய தலைமுறையினரிடமும் மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு தெம்மாங்குப் பாடல்தான் நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்… என்னடி முனியம்மா பாடல். வாங்க மாப்பிள்ளை வாங்க என்ற படத்தில் TKS நடராஜன் பாடிய இந்த தெம்மாங்குப் பாடல் அப்போது பட்டிதொட்டியெங்கும் மிகப் பிரபலமாக ஒலித்த கானா. இப்போதுள்ள கானாக்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கியது இந்தப் பாடல் எனலாம்.
இந்த ஒரு பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தேவி ஸ்ரீ. நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்” என்ற என்னடி முனியம்மா” பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும். நல்ல நடிப்பு திறன் இருந்தும் தமிழ் திரையுலகில் பெரிதளவில் பேசப்படவில்லை. இப்படி நாயகிக்குரிய அனைத்தும் உள்ளடக்கிய ஒரு நடிகை பெரிய அளவில் வர இயலாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.
1984 ல் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய ‘குடும்பம்’ படத்தில் விஜய்காந்துக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் தேவி ஸ்ரீ. பின்னர் பி.மாதவன் இயக்கிய ‘கரையைத் தொடாதஅலைகள்’ 1985 படத்தில் நாயகியாகவும் நடித்தார்.
பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு இத்தனை பரிசுகளா?.. மத்த டைட்டில் வின்னர் எல்லாம் பாவம்!
அதன்பின் முதலில் மனோபாலாவை வைத்து ஆரம்பிக்கப்பட்ட ‘பொண்ணு புடிச்சிருக்கு’ படத்தில் தேவிஸ்ரீ தான் நடிக்க வேண்டியது. பின்னர் இயக்குனர் கே.ரங்கராஜ் ஒப்பந்தம் ஆனதால் நாயகி மாற்றப்பட்டார். படத்தில் இந்த வேடத்தில் நடித்தது அப்போதைய மண் வாசனை புகழ் ரேவதி .
அதன்பின் 1984-ல் “வாங்க மாப்பிள்ளை வாங்க” சங்கர் கணேஷ் இசையில் நடராஜன் குரலில் நடிகர் சிவசங்கருடன் இவர் ஆடிய டப்பாங்குத்து பாடல் ” என்னடி முனியம்மா உன் கண்ணுல மை”.. பாடல் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. பின்னாளில் இந்த “என்னடி முனியம்மா’ பாடல் அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தில் சுஜா வருனி’ கவர்ச்சி ஆட்டத்தோடு ரீ மிக்ஸ் செய்யப்பட்டு பிரபலமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் சாகரிகா’ என்ற பெயரில் ஆட பொம்மா, மல்லி மொகுடு ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் தெலுங்கிலும் இவர் பெரிய அளவில் தடம் பதிக்கவில்லை. தேவிஸ்ரீ ‘ஊமைக்குயில்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். இன்னொரு நாயகி இளவரசி. இந்தப் படமாவது தமிழில் தனக்கு ஒரு அந்தஸ்து ஏற்படுத்திக்கொடுக்கும் என்று நம்பினார் தேவிஸ்ரீ. ஆனல் அதுவும் கைகூடவில்லை.
பின்னர் 1990 வெளியான ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் படத்தில் வில்லன் சரண் ராஜ் கெடுத்த அபலைப் பெண்ணாக நடித்து இருப்பார். மு.க.ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த சீரியல் பெயர் குறிஞ்சிமலர். இந்த சீரியலில் ஸ்டாலினின் பெயர் அரவிந்தன். தூர்தர்ஷனில்13 பாகங்களாக ஒளிபரப்பான இந்த தொடரில் மு.க.ஸ்டாலின் கதாப்பாத்திரம் பெயர் அரவிந்தன். அந்த சீரியல் தாக்கத்தால், தி.மு.க தொண்டர்கள் அக்காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அரவிந்தன் என்று பெயர் வைத்தனர். இதில் ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து பெரும் பாராட்டுகளைப் பெற்றவர் தேவிஸ்ரீ.
தற்போது இவர் சினிமாவில் நடித்த தடயம் இணையத்தில் எங்கும் இல்லாமல் அமைதியாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார்.