பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு இத்தனை பரிசுகளா?..

இதுவரை எந்த சீசனிலும் டைட்டில் வின்னருக்கு கிடைக்காத அளவுக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டிலை வென்ற விஜே அர்ச்சனாவுக்கு ஏகப்பட்ட பரிசுகள் குவிந்த நிலையில், சந்தோஷத்தில் திளைத்துள்ளார். அதே நேரத்தில் மற்ற சீசன் டைட்டில் வின்னர்களுக்கு எல்லாம் இதுபோன்ற பரிசுகள் எல்லாம் கிடைக்கவில்லையே என அப்செட் ஆகியிருப்பார்கள்.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா:

விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. எண்ட்மோல் ஷைன் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு வீட்டுக்குள் 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை உள்ளே அனுப்பி அதில், கடைசி வரை 105 நாட்கள் யார் தாக்குப்பிடிக்கிறார்களோ அதிலும் மக்கள் ஓட்டுக்களை அதிகம் கவரும் ஒரு போட்டியாளருக்கு மட்டுமே வெற்றிக் கோப்பை மற்றும் 50 லட்சத்துக்கான காசோலை பரிசாக வழங்கப்படும்.

இத்தனை சீசன்களாக இதே நடைமுறை தான் தொடர்ந்து வருகிறது. இந்த சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக 20 நாட்களுக்குப் பிறகு தான் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். வெளியே இருக்கும் போதே பிரதீப் ஆண்டனிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை அறிந்து கொண்ட அவர், உள்ளே அவருக்கு எதிராக போட்டியாளர்கள் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என குரல் கொடுத்த போது அதை அவர் மறுத்து விட்டார்.

அதன் பின்னர் தான் அர்ச்சனாவுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே சண்டை வெடிக்க அர்ச்சனாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக பெருக ஆரம்பித்தது. டாப் 5 இறுதிப்போட்டியாளர்களில் அர்ச்சனாவும் ஒருவராக கலந்து கொண்ட நிலையில், நேற்று நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பிக் பாஸ் டைட்டிலை தட்டித் தூக்கினார் அர்ச்சனா ரவிச்சந்திரன்.

பரிசுத் தொகை:

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த முறை ஜி ஸ்கொயர் நிறுவனம் பார்ட்னர்ஷிப் போட்ட நிலையில், 15 லட்சம் மதிப்புள்ள பிளாட் ஒன்றும் அர்ச்சனாவுக்கு பரிசாக கிடைத்தது.

மேலும், விட்டாரா கார் நிறுவனம் ஒரு காஸ்ட்லி கார் ஒன்றையும் பரிசாக அர்ச்சனாவுக்கு வழங்கி உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் பரிசு மற்றும் 15 லட்சம் நிலம் மற்றும் 10 லட்சம் ரூபாய் கார் என ஒட்டுமொத்தமாக 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசு வென்றுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.