சமீபத்தில் வெளியான திரெளபதி’ என்ற நாடக காதல் குறித்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ள நிலையில் தற்போது இன்னொரு நாடக காதல் திரைப்படம் உருவாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இயக்குனர் சண்முகம் முத்துசாமி என்பவர் நாடக காதல் கொலைகள் பற்றி நடுநிலையான பார்வையோடு ஒரு சினிமா எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ஏற்கனவே இவர் ஜிவி பிரகாஷ் நடித்த அடங்காதே என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து சண்முகம் முத்துசாமி கூறியிருப்பதாவது: “வேற வழியில்லை… வெகு விரைவில் நாடகக் காதல் என்ற வார்த்தை ஏன் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், ஆணவக் கொலைகள் பற்றிய நடுநிலையான பார்வையோடு ஒரு சினிமா எடுக்கப்படும். இதுகுறித்த அறிவிப்பு விரைவில்….