திரெளபதி ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குனர்: சுறுசுறுப்பாகும் அரசியல் அமைப்புகள்

By Staff

Published:


63d346da9fc14061f56a23c7982c3d1e

நாடக காதல் திரைப்படமான ’திரௌபதி’ படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 28 என இந்த படத்தின் இயக்குனர் ஜி.மோகன் அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒருசில அரசியல் அமைப்புகள் தற்போது மேலும் சுறுசுறுப்பாகி வருகின்றன.

திரெளபதி படத்தின் சில கேரக்டர்கள் மற்றும் சில காட்சிகள் சர்ச்சைக்குரியதாக இருப்பதாகவும், நாடக காதல் குறித்த காட்சிகள் ஒருசில அரசியல் கட்சி தலைவர்களை நேரடியாக தாக்குவதாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி வரும் ஒருசிலர் இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால் இன்னும் ஒருசில அமைப்புகள் இந்த படம் ரிலீஸாகியே தீரவேண்டும் என்று கூறியதோடு இந்த படத்திற்கு ஆதரவாக போஸ்டர்களும் அடித்துள்ளன. இந்த நிலையில் திரௌபதி திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும் என இயக்குனர் ஜி.மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்ப்புகளை மீறி இந்த படம் ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Comment