1992ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் பாண்டியன். இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். உலகத்துக்காக, அடி ஜூம்பா, அன்பே நீ என்ன, பாண்டியனா கொக்கா கொக்கா, பாண்டியனின் ராஜ்ஜியத்தில் ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில் தான் உள்ளன.
இந்தப் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து குஷ்பூ, ஜனகராஜ், டைகர் பிரபாகர், சரண்ராஜ், வினுசக்கரவர்த்தி, ராதாரவி, சத்யா, ஜெயகலா, டைப்பிஸ்ட் கோபு, டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்தனர்.
இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமன் தனது விசாலம் நிறுவனம் சார்பில் தயாரித்தார்.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ரைட் பாண்டியனாக நடித்து இருப்பார். இந்தப்படம் 92 தீபாவளி அன்று அக்டோபர் 25ல் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்துடன் இணைந்து கமல் நடித்த தேவர் மகன், சத்யராஜின் திருமதி பழனிச்சாமி, பாக்கியராஜ் நடித்த ராசுக்குட்டி, பிரபுவின் செந்தமிழ் பாட்டு ஆகிய படங்கள் வெளியானது.
ரஜினிகாந்த் பாண்டியன் படத்தை ரிலீஸ் பண்ணவே கூடாது என்றார். இது ஏன் எப்படி நடந்தது என்று சொல்கிறார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
பாண்டியன் படம் ரிலீஸாக 10 நாள் இருக்கு. இந்த நிலைமையில எஸ்.பி.முத்துராமனின் மனைவி காலமாகி விடுகிறார். ஆனால் இறந்த 3வது நாளே படத்திற்கான வேலைகளில் இறங்கி விடுகிறார். அவர் இதுறித்து சொல்வது இதுதான்.
தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் இல்லேன்னாலும் நஷ்டம் வரக்கூடாது என்பதில் குறியா இருப்பேன்.
எல்லாப் படங்களுமே சொன்ன தேதில ரிலீஸ் பண்ணிடுவேன். இது வந்து கிட்டத்தட்ட என் சொந்தப்படம் மாதிரி. இது ரிலீஸ் தள்ளிப்போச்சுன்னா விநியோகஸ்தருக்கு எவ்வளவு நஷ்டம் வரும்னு சரவணன் சார் ஒருமுறை சொன்னார்.

இல்லை சார். ரிலீஸ் தள்ளிப்போகாது. என் மனைவி கூட இதை ஒத்துக்க மாட்டார். ஆகவே நான் நிச்சயமா ரிலீஸ் பண்றேன். ரஜினி சாரும் சிங்கப்பூர்ல இருந்து சொன்னார். முத்துராமன் சார் நீங்க படத்தைத் தள்ளிப்போடுங்க. நான் வந்து செட்டில்மெண்ட் பண்ணிக்கலாம்னு சொன்னார். இல்ல ரஜினி எல்லாப் படமும் சொன்ன தேதில ரிலீஸ் பண்ணிட்டு, நம்ம படத்தை பண்ணலேன்னா விநியோகஸ்தர்கள் எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு தெரியும்.
அதனால என் மனசையும் துக்கத்தையும் அடக்கிக்கிட்டு படத்தை ரிலீஸ் பண்றேன்னு சொல்லிட்டு அந்தப் படத்தை முடிச்சி ரிலீஸ் பண்ணுனேன்.
இன்னைக்கு உணவு, உடை, இருப்பிடம்ன்னு கஷ்டப்படாம வாழறேன்னா அதுவும் ஒரு காரணம். அதே மாதிரி பேர் சொல்லும் பிள்ளை படத்துல கமல் ஒரு உதவி செய்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


