தமிழ் திரையுலகை பொறுத்தவரை மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் என்றாலே படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அந்த படத்தின் வியாபாரம் முடிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயன் படமும் இணைந்துள்ளது
சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
அஜித், விஜய் போலவே சிவகார்த்திகேயன் திரைப்படங்களும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே வியாபாரம் ஆகி வருவது அவருடைய வளர்ச்சியை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது